சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காமராஜர் 118வது பிறந்தநாள் - அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை - விருதுநகரில் எளிமையாக கொண்டாட்டம்

பெருந்தலைவர் காமராஜரின் 118 பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கண்ணன் காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள் மாலை அணிவித்து அரசு

Google Oneindia Tamil News

சென்னை: கல்விக்கண் திறந்த காமராஜரின் 118ஆவது பிறந்த நாள் விழா தமிழக அரசின் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் காமராஜர் உருவப்படத்திற்கு தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். விருதுநகரில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள திரு உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பெருந்தலைவர் 118வது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

Kamarajar Birthday 2020: Karmaveerar Kamarajar 118th Birth Anniversary celebration

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனை நிறுத்துமாறு எந்தச் சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை. சுற்றறிக்கை வெளியிடப்படாமலேயே எப்படி நகைக்கடன் நிறுத்தம் பற்றிய தகவல் வெளியானது எனத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

56 நாளில் 9 லட்சம் கொரோனா நோயாளிகள்... குணமடைவதில் ராக்கெட் வேகம்... ஆறுதலான விஷயம்!!56 நாளில் 9 லட்சம் கொரோனா நோயாளிகள்... குணமடைவதில் ராக்கெட் வேகம்... ஆறுதலான விஷயம்!!

காமராஜர் பிறந்த தினத்தன்று ஆண்டுதோறும் விருதுநகரில் அமைந்துள்ள அவரது நினைவு இல்லம், மணிமண்டபம் முழுவதும் திருவிழா போல் கூட்டம் காட்சியளிக்கும். பள்ளி கல்லூரி மாணவர்கள், தனியார் அமைப்பினர், கட்சியினர் பாகுபாடின்றி அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

Kamarajar Birthday 2020: Karmaveerar Kamarajar 118th Birth Anniversary celebration

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த தமிழகம் அறிவித்த ஊரடங்கு அமலில் இருப்பதால் அவரது பிறந்த நாள் விழா எந்த ஆரவாரமும் இன்றி அமைதியாக கொண்டாடப்பட்டது. விருதுநகரில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள திரு உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இதை அடுத்து காமராஜர் நினைவிடத்தில் உள்ள அவரது புகைப்படங்களை பார்வையிட்டார். கொரோனோ பரவுதலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொது மக்கள் கூட்டமாக வர தடை விதிக்கப்பட்டு உள்ளது நான்கு நான்கு நபர்களாக காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது

English summary
The 118th birth anniversary of the late Chief Minister K. Kamaraj was celebrated across the district in simple manner on Wednesday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X