சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட.. திமுக பக்கம் தாவும் "மெகா புள்ளி".. எல்லாத்துக்கும் காரணம் ஸ்டாலின்தான்.. பிஸியாகும் அறிவாலயம்

கமீலா நாசர் விரைவில் திமுகவில் இணையலாம் என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: முக்கியமான புள்ளி திமுக பக்கம் தாவ உள்ளதாக கூறப்படுகிறது.. இதற்கு காரணம் ஸ்டாலினின் இந்த 2 மாத கால செயல்பாடுகள் என்றும் கூறப்படுகிறது.

Recommended Video

    161 வருட திட்டம்.. முதல்வர் Stalin-ன் சேது சமுத்திர கோரிக்கை ஏன் முக்கியம்?

    இந்த முறை முக ஸ்டாலின் பதவியேற்றபோது, தமிழ்நாடு மிக மோசமான சூழலில் சிக்கி இருந்தது.. தொற்று எண்ணிக்கை அதிகம், மற்றொரு புறம் தடுப்பூசி கையில் இல்லை.. இன்னொரு புறம் கஜானா காலியாக இருந்தது.

    இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்ற ஸ்டாலின் துரிதமாக செயல்பட ஆரம்பித்தார்..

    நதிநீர் முதல் சுற்றுச்சூழல் திருத்த சட்டம் 2020 வரை மோடியிடம் ஸ்டாலின் வைத்த 25 கோரிக்கைகள் நதிநீர் முதல் சுற்றுச்சூழல் திருத்த சட்டம் 2020 வரை மோடியிடம் ஸ்டாலின் வைத்த 25 கோரிக்கைகள்

    திட்டம்

    திட்டம்

    ஒரு மாத காலத்துக்கு மேலாக கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பணியிலேயே முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தார்.. இப்போது தொற்று குறைந்து வருகிறது. இதனிடையே, மற்றொரு புறம், மிக மிக முக்கியமான மற்றும் அவசியமான திட்டங்களை அறிவித்து தமிழ்நாட்டு மக்களின் மனதில் இடம்பெற்று வருகிறார்.

    நாகரீகம்

    நாகரீகம்

    மேலும், பல்வேறு கட்சி தலைவர்களுடன் நட்பு பாராட்டி, அரசியல் நாகரீகத்தை ஆழமாக விதைத்து வருகிறார்.. முடிந்த அளவுக்கு எதிர்க்கட்சிகளால் விமர்சனம் செய்ய முடியாத அளவுக்கு ஸ்டாலினின் செயல்பாடுகள் அமைந்து வருகிறது. அதனால்தான், தேமுதிகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் உட்பட பலரும் திமுகவில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள்..

    விஜயகாந்த்

    விஜயகாந்த்

    ஆனால், நண்பர் விஜயகாந்த் மனசு கஷ்டப்படுமே என்று, அக்கட்சியினரின் இணைப்பை தடுத்து நிறுத்தினார் ஸ்டாலின்.. எனினும், மற்ற கட்சியினர் திமுகவில் இணைய ஆர்வம் காட்டி வருவதை தவிர்க்க முடியவில்லை. அந்த வகையில் ஒரு முக்கிய புள்ளி திமுக பக்கம் வர உள்ளதாக தகவல்கள் கசிகின்றன.. அவர்தான் மநீமய்யத்தில் இருந்து விலகிய கமீலா நாசர் ஆவார்..

     காரணம்?

    காரணம்?

    மய்யத்தில் இருந்து முதல்முதலில் விலகியது இவர்தான்.. ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக இவர் விலகியதாக சொல்லப்பட்டதே தவிர, உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.. ஆனால், இவர்தான் திமுகவில் விரைவில் இணைய வாய்ப்புள்ளதாம்.. இந்த 2 மாத காலமாக ஸ்டாலினின் அரசியல் செயல்பாட்டை உற்று நோக்கி வந்துள்ள நிலையில், அதில் ஈர்க்கப்பட்டு, திமுகவில் இணையவும் யோசித்து வருகிறாராம்.

    மகேந்திரன்

    மகேந்திரன்

    இதற்கு முன்பு இப்படித்தான் மநீம மகேந்திரன் கட்சியில் இருந்து விலகியதும், இவரும் திமுக பக்கம் செல்வார் என்று தகவல்கள் கசிந்தன.. இப்போது கமீலா பெயரும் அடிபடுகிறது.. அதாவது முந்தைய காலங்களில் யாரெல்லாம் திமுகவை விமர்சித்தார்களோ, அவர்கள் எல்லாம் திமுகவை நாடி வர தொடங்கி உள்ளனர்.. கமீலாவை போல மேலும் பலர் அறிவாலயம் பக்கம் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    Kameela Nazar may join in DMK Soon, say Sources
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X