சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போட்டிருக்கிறது ஸ்விக்கி உடை.. டெலிவரி செய்தது பிரியாணியில்லை.. கஞ்சா.. சென்னையில் பரபரப்பு சம்பவம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் ஸ்விக்கி டெலிவரி செய்வது போல் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் பகுதியில் உள்ள புட் ஸ்ட்ரீட் அருகே ஆன்லைனில் ஸ்விக்கி உணவு டெலிவரியில் வேலை செய்வது போல் இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் கானத்தூர் காவல் ஆய்வாளர் வேலு தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஸ்சுவிகி நிறுவனத்தில் பணிபுரிவது போல் உடை அணிந்து கொண்டு ஒருவர் அங்கிருந்த கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் ஞாயிறு ஊரடங்கு.. மீன் வாங்க இன்றே கூட்டமாக கிளம்பிய அசைவ பிரியர்கள்! விலை கிடுகிடு தமிழகத்தில் ஞாயிறு ஊரடங்கு.. மீன் வாங்க இன்றே கூட்டமாக கிளம்பிய அசைவ பிரியர்கள்! விலை கிடுகிடு

தாழம்பூர் காவல் நிலைய போலீஸார்

தாழம்பூர் காவல் நிலைய போலீஸார்

இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கைது செய்து தாழம்பூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டபோது அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 30 வயதான பிரகாஷ்குமார் சேனாபதி என்பது தெரியவந்தது. இவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் எடை கொண்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பைக் பறிமுதல்

பைக் பறிமுதல்

கஞ்சா விற்பதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதே போல் இன்னும் வேறு யாரெல்லாம் இது போல் உணவு டெலிவரி நிறுவனத்தின் பெயரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்து பிரகாஷ்குமாரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ரேவ் பார்ட்டி

ரேவ் பார்ட்டி

கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட சென்னையின் முக்கிய இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது போல் அங்கிருக்கும் ரிசார்ட்களில் ரேவ் பார்ட்டி எனப்படும் போதை பார்ட்டியும் விருப்பப்பட்ட பெண்களை அழைத்து சென்று நெருக்கமாக இருக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.

கஞ்சா சப்ளை

கஞ்சா சப்ளை

இதற்கென தனி நெட்வொர்க்கே இயங்குவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சென்னை மாநகரின் உள்ளேயும் சில கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களுக்கு கூட கஞ்சா சப்ளை செய்யும் சம்பவங்களையும் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். இன்னும் சில சமூக விரோதிகள், வீட்டுக்குள்ளேயே கஞ்சா செடி வளர்த்து வருகிறார்கள். இவையெல்லாம் சட்டவிரோதம் என தெரிந்தே இது போல் செயல்படும் நபர்களுக்கும் வருங்கால இளைஞர்களை தள்ளாட்டில் வைத்திருக்க முயலும் நபர்களுக்கும் காவல் துறை உரிய தண்டனையை கொடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாகும்.

English summary
Kanathur Police arrested a north Indian youth who sells Kanja in Swiggy uniform.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X