சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வடகலை, தென்கலை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பூஜையின் போது வடகலை, தென்கலை பிரிவினர் மோதல் ஏற்பட்டால் காவல்துறையிடம் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோவில் செயல் அலுவலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வைணவ திருத்தலங்களில் வடகலை அல்லது தென்கலை பிரிவினர் இடையே நீண்ட காலமாக பிரச்சனையாக இருந்துவருகிறது. இருதரப்பினர் மத்தியில் அவ்வப்போது, மோதல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

kanchipuram Varadaraja Perumal Temple Vadakalai and tenkalai issue: High Court important order

இந்த நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலை துறைக்கு எதிராகவும், வரதராஜ பெருமாள் கோயில் செயல் அலுவலர்க்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அந்த வழக்கில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை மற்றும் தென்கலை அர்ச்சகர்களுக்கு இடையே மோதல் நடைபெற்று வருவதாகவும் இதனால் கோவில் விழாக்கள் பூஜைகள் சுமூகமாக நடைபெறுவதில்லை என்று தெரிவித்திருந்தார். இதனால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 1915 மற்றும் 1969 ஆகிய ஆண்டுகளில் தென்கலை பிரிவினர் முதலில் பிரபந்தம் பாடவும் மத்திரங்களை பூஜை செய்யவும் அதன் பிறகு வடகலை பரிவினர் பிரபந்தம் பாடவும் செய்ய வேண்டும் என்ற பிறப்பித்த உத்தரவுகளை உரிய முறையில் கடைப்பிடிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

1915 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில் வடகலை பரிவினை பிரபந்தம் படுவதை தென்கலை பிரிவினர் தடுக்க கூடாது எனவும் வழிபாட்டுக்கு மட்டுமே மத்திரங்கள் ஓதப்படுவதாக தெரிவிக்கபட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு நடைபெற்றது. அப்போது இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வடகலை, தென்கலை பிரச்சனை நீண்டநாள் பிரச்சனையாக இருப்பதால் கோவில் விழாக்கள் மற்றும் பூஜைகளை சுமூகமாக நடத்த முடிவதில்லை என்று தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், நீண்ட நாள்களாக நீடித்து வரும் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவும் வகையில் இந்த உத்தரவுகளை பிறப்பிக்கிறேன். வரதராஜ பெருமாள் கோயில் செயல் அதிகாரி முதலில் தென்கலை பிரிவினரை ஸ்ரீசைல தயா பத்ரம் முதல் இரண்டு வரிகளை பாடவேண்டும். பின்னர் வடகலை பிரிவினர் ஸ்ரீராமானுஜ தயாபத்ரம் முதல் இரண்டு வரிகளை பாடவேண்டும் பின்னர் இரண்டு பிரிவினரும் சேர்ந்து பாட வேண்டும். பிரபந்தம் பாடிய பிறகு மனவாள மாமுனிகள் வாலித்திருநாமம் பின்னர் தேசிகன் வாலி திருநாமம் பாடி முடிக்க வேண்டும்.

உயர்நீதிமன்ற உத்தரவை தென்கலை, வடகலை பிரிவினர் மதித்து செயல்படவில்லை அல்லது பிரபந்தம் பாடவில்லை என்றால். யார் முன் வந்து பிரபந்தம் பாட முன் வருபவர்களை செயல் அதிகாரி அனுமதிக்க வேண்டும்.

விழா காலங்களில் வடகலை, தென்கலை பிரிவினரால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் பிரச்சினை ஏற்பட்டால் செயல் அலுவலர் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும். அந்த புகாரை பெற்று குற்ற செயலில் ஈடுபடுவார்களுக்கு எதிராக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் செயல் அலுவலர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கபடும். அல்லது இந்த உத்தரவை செயல்படுத்தாத நபர்களுக்கு எதிராக வரதராஜ பெருமாள் கோயில் செயல் அலுவலர் சம்மந்தப்பட்ட நபர்களின் பெயரை குறிப்பிட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தெடரா வேண்டும். இந்த உத்தரவு மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் நீதிபதி தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளார்.

English summary
kanchipuram Varadaraja Perumal Temple Vadakalai issue: High Court important order to Temple Action Officer
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X