சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வண்ணாரப்பேட்டை போராட்டத்தை போலீஸார் உரிய முறையில் கையாளவில்லை - திமுக எம்பி கனிமொழி

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகம் முழுவதும் போராட்டத்தில் இறங்கிய இஸ்லாமியர்கள் | Protests spread all over Tamilnadu

    சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டத்தை போலீஸார் உரிய முறையில் கையாளவில்லை என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Kanimozhi MP says that Police didnt handle the situation properly

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நேற்று மாலை போராட்டம் நடத்தினர்.

    போக்குவரத்து இடையூறாக நடத்திய இந்தப் போராட்டத்தை விட்டு கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். அதற்கு அவர்களும் போலீஸார் மீது கல்வீசியதாக கூறப்படுகிறது.

    போலீஸார் நடத்திய தடியடி சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி கூறுகையில் சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டத்தை போலீஸ் உரிய முறையில் கையாளவில்லை. காவல் இணை ஆணையர் நிலைமை தவறாக கையாண்டதால் வன்முறை ஏற்பட்டது.

    ரஜினிகாந்த் அவர்களே, தடியடி நடத்தியது தெரியாதா.. கண்டிக்க துணிச்சல் இருக்கிறதா.. வன்னியரசு காட்டம்!ரஜினிகாந்த் அவர்களே, தடியடி நடத்தியது தெரியாதா.. கண்டிக்க துணிச்சல் இருக்கிறதா.. வன்னியரசு காட்டம்!

    போராட்டத்தை உரிய முறையில் கையாண்டிருந்தால் மக்கள் மீதான வன்முறையை தவிர்த்திருக்கலாம். வண்ணாரப்பேட்டை போராட்டம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

    English summary
    DMK Kanimozhi MP says that the Washermenpet issue was not handled properly so that violence stirs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X