சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித்ஷாவுக்கு ட்வீட் போட்டு நன்றி சொன்ன கனிமொழி.. காரணம் இதுதான்!

Google Oneindia Tamil News

சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திமுக எம்பி கனிமொழி நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றினை போட்டுள்ளார்.

பொதுவாக, எந்த விவகாரமாக இருந்தாலும் எம்பி கனிமொழி, மத்திய அரசிடம் வெளிப்படையான கோரிக்கை வைத்து விடுவார். அதிலும் வெளிநாடுகளில் தமிழர் நலன் என்றால் கூடுதல் அக்கறை காட்டிவிடுவார்.

சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், கனிமொழி உடனே சுஷ்மாவிடம் கொண்டு போய்விடுவார். சுஷ்மாவும், கனிமொழியின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற உதவுவார்.

'தாய்' மொழியில் திருக்குறள் மொழி பெயர்ப்பை வெளியிட்ட மோடி.. தாய்லாந்தில் கோலாகலம்'தாய்' மொழியில் திருக்குறள் மொழி பெயர்ப்பை வெளியிட்ட மோடி.. தாய்லாந்தில் கோலாகலம்

 கனிமொழி

கனிமொழி

அப்படித்தான் இந்த முறை எம்பியாக பதவியேற்றபோதுகூட,வெளியுறவு துறை அமைச்சரான ஜெய்சங்கரிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தார். ஜோதி, பிரேம் ஆகிய 2 தமிழக பாடகர்களும், பார்வையற்றவர்கள் என்பதைக் காரணம் காட்டி இங்கிலாந்து அரசு விசா தர மறுத்தது. கனிமொழி இந்த விஷயத்தில் தலையிட்டு, ஜெய்சங்கரிடம் கோரிக்கை வைக்க, ஜெய்சங்கரும் அதன்பேரில் உடனடி நடவடிக்கை எடுத்தார். டெல்லியிலிருக்கும் இங்கிலாந்து அரசின் தூதரகத்தை தொடர்புகொண்டு பேசி, அந்த பாடகர்களுக்கு விசா தர அரை மணி நேரத்தில் ஏற்பாடு செய்தார்.

மீனவர்கள்

அதுபோலவே இப்போதும் ஒரு விவகாரம் எழுந்தது. தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 40 மீனவர்கள் கரை திரும்பவில். அதனால், அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்று கனிமொழி மத்திய அரசிடம் 2 நாளைக்கு முன்பு ஒரு கோரிக்கை விடுத்திருந்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி

தூத்துக்குடி தொகுதி எம்பி என்ற முறையில், மீனவ சங்கங்கள் கனிமொழியிடம் முறையிட, உடனே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு போன் போட்டு பேசி, மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

அமித்ஷா

அமித்ஷா

அதன்படியே மத்திய அரசும் நடவடிக்கை எடுத்தது. தற்போது, அவர்கள் பத்திரமாக ஊர்திரும்பி விட்டனர் என்பதால், அந்த தகவலை பகிர்ந்து அமித்ஷாவுக்கும் நன்றி சொல்லி உள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் "தூத்துக்குடி மாவட்டம் தருவாய்குளத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லோரும் பத்திரமாக ஊர் திரும்பிவிட்டனர். இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மீட்புப்பணியில் ஈட்டுப்பட்ட கடற்படை, மாவட்ட ஆட்சியர் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

English summary
thoothukudi dmk mp kanimozhi thanked to amithshah and coast guard who helped the missing boat of fishermen
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X