சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி... முதல்வருக்கு நன்றி சொன்ன கனிமொழி

தளபதி சொல்வதை எல்லாம் செய்ய துடிக்கும் பழனிசாமிக்கு நன்றி. வாழ்த்துக்கள் என்று திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் பழனிச்சாமியின் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு திமுக எம்.பி கனிமொழி நன்றி கூறியுள்ளார். அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி தளபதி சொல்வதை எல்லாம் செய்ய துடிக்கும் பழனிசாமிக்கு நன்றி. வாழ்த்துக்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கனிமொழி எம்.பி.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்த போது, தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, 31.1.2021 அன்றைய நிலவரப்படி, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 இலட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாயையும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். சட்டசபைத் தேர்தல் வர உள்ள நிலையில் அதிமுக அரசு மீண்டும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Kanimozhi MP Thanks To tamilnadu Chief Minister

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியான, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடனும் திமுக ஆட்சி அமைந்தவுடன் தள்ளுபடி செய்யபடும் என்று மு.க ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்த முதல்வர் பழனிச்சாமி, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இதனை குறிப்பிட்டு திமுக கனிமொழி எம்பி நன்றி கூறி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி தளபதி சொல்வதை எல்லாம் செய்ய துடிக்கும் பழனிசாமிக்கு நன்றி. வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். ஸ்டாலின் அறிக்கை நாயகன் என்று முதல்வர் பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில் தமிழகத்தில் திமுக சொல்வது தான் நடக்கிறது. அதனால் இங்கு நடைபெறுவது திமுக ஆட்சி தான் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இன்று கனிமொழியும் அதனை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

English summary
DMK MP Kanimozhi has thanked Chief Minister Palanisamy for announcing an agricultural loan waiver.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X