சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தெலுங்கானா என்கவுண்டர்.. கனிமொழி, பாலபாரதி அதிருப்தி.. மாயாவதி, விஜயதாரணி வரவேற்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    2008லேயே 3 என்கவுண்டர்.. பெண் மீது ஆசிட் அடித்தவர்களை சுட்டு கொன்ற ஹீரோ.. யார் இந்த கமிஷ்னர் சஜ்னார்

    சென்னை: ஹைதராபாத் பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவத்திற்கு கலவையான கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

    இந்த என்கவுண்டர் சம்பவத்திற்கு, திமுக எம்.பி.யான கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலபாரதி உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    Kanimozhi not welcome police encounter in Telangana

    ஹைதராபாத் பெண் டாக்டர் பலாத்கார குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த சம்பவம் தொடர்பாக தலைவர்கள் கூறிய கருத்துக்கள் இதோ:

    மாயாவதி,பகுஜன் சமாஜ்: டெல்லி,உத்தரபிரதேச அரசுகள் தெலங்கானா போலீசாரிடம் இருந்து பாடம் கற்க வேண்டும்

    பாலபாரதி: இந்த என்கவுண்டர், சாதாரண மக்களுக்கு நியாயம் போல தோன்றும். ஆனால், முறையாக விசாரித்து, கடுமையான சட்ட ரீதியான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். நாடு முழுக்க பலாத்காரங்களுக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட வேண்டும். எனவே, என்கவுண்டர் எதற்கும் தீர்வு கிடையாது.

    கனிமொழி: 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால், பலருக்கு மகிழ்ச்சி தரும் வேளையில், நியாயம் கிடைக்கும் உணர்வை தருகிறது. அதேவேளையில், என்கவுண்டர்தான் இதற்கு தீர்வா என்றும் கேள்வி எழுகிறது.

    விஜயதாரணி, காங்கிரஸ்: பெண்களுக்கு ஆதரவாக இறைவனே வழங்கிய தீர்ப்பாக கருதுகிறேன், சரியான நடவடிக்கைக்கு எனது பாராட்டுக்கள்!

    ஹைதராபாத் என்கவுண்டர்.. 8 நாட்கள் நடந்த விசாரணை.. போலீசை கோபத்திற்கு உள்ளாக்கிய அந்த வாக்குமூலம்!ஹைதராபாத் என்கவுண்டர்.. 8 நாட்கள் நடந்த விசாரணை.. போலீசை கோபத்திற்கு உள்ளாக்கிய அந்த வாக்குமூலம்!

    பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக: என்கவுன்ட்டரில் 4 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டது வரவேற்கத்தக்கது. இவ்வாறு பெண் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    ஒருபக்கம் என்கவுண்டருக்கு ஆதரவாகவும், எதிராகவும், சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்கள் பதிவு செய்யப்படுகின்றன. உண்மையிலேயே 4 பேரும் குற்றவாளிகளா என்பதை சட்டத்தின்முன்பாக உறுதி செய்யாமல், என்கவுண்டர் செய்தது தவறு என்பது ஒருதரப்பு வாதம் என்றால், குற்றவாளிகளுக்கு அச்சம் தேவை என்பதால், இது சரிதான் என்பது மற்றொரு தரப்பு வாதமாக உள்ளது.

    English summary
    DMK Kanimozhi not welcome police encounter in Telangana, and many netizens also says like that.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X