சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு.. எடப்பாடி அரசின் திட்டமிட்ட செயல்.. கனிமொழி விமர்சனம்

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு எடப்பாடி அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று திமுக மாநிலங்களவை எம்பி கனிமொழி தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையை கண்டித்து தூத்துக்குடியில் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது 100-ஆவது நாள் போராட்டத்தைத் தொடர்ந்து மக்கள் பேரணி செல்ல முயன்றனர்.

Kanimozhi says that Sterlite gun firing was planned by Edappadi government

அப்போது போலீஸார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை எழுப்பியது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் இறந்தவர்களின் மார்பிலும், தலையில் பின்னாலிருந்து குண்டுகள் பாய்ந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. இதனால் தூத்துக்குடி மக்கள் கொந்தளித்து உள்ளனர்.

இதுகுறித்து கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு எடப்பாடி அரசால் திட்டமிடப்பட்ட படுகொலை என்பதை பிரேத பரிசோதனை ஆய்வு தெரிவிக்கிறது. பெரும்பாலானவர்கள் மார்பிலும்,தலையிலும் பின்னிலிருந்து சுடப்பட்டிருக்கிறார்கள். கார்ப்பரேட்டுகளுக்காக மக்களை கொல்லும் இந்த அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார் கனிமொழி.

English summary
MP Kanimozhi tweet that Sterlite gun firing incident was planned by Edappadi Government, It is proved by the post mordem reports of that 13 who lost lives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X