சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வழக்கை சந்திக்க வேண்டும்.. கனிமொழி மனு தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடி லோக்சபா தேர்தலில் தன் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால்,
அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்ககோரி, அத்தொகுதியை சேர்ந்த வாக்காளர் சந்தான குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தனர்..

kanimozhi should face tuticorin election case : HC Rejects kanimozhi petition

மக்கள் ஒரு வேட்பாளரை பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக வேட்புமனுவில் வருமான விவரங்கள் கேட்கப்படும் நிலையில்,தன் கணவர் வருமானத்தை மறைத்தது தவறு என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது..

இந்த நிலையில் சந்தானகுமார் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது..

சென்னை சாலைகளில் ஸ்ட்ரிக்ட் ஆகும் நோ பார்க்கிங் விதி.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!சென்னை சாலைகளில் ஸ்ட்ரிக்ட் ஆகும் நோ பார்க்கிங் விதி.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி தாக்கல் செய்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம், கனிமொழியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்..

தனது உத்தரவில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மனுதாரர் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு உகந்தது என தெரிவித்த நீதிபதி, தனது வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டுமென்ற கனிமொழியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்..

English summary
kanimozhi should face tuticorin lok sabha election case : madras HC Rejects kanimozhi petition
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X