சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பேக்கேஜ்" அரசியலில் இதுவும் சாத்தியமே.. தம்பிதுரை அதிமுகவிலிருந்து தாவுவாரா??

திமுகவுக்கு தம்பிதுரை இழுக்கப்படுவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுகவிலிருந்து வேறு கட்சிக்கு தாவுவாரா தம்பிதுரை?- வீடியோ

    சென்னை: திமுக எம்பி கனிமொழி ஏன் அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை பற்றி இப்படி ஒரு கருத்தை சொன்னார்? என்று குழப்பமாக உள்ளது.

    கொஞ்ச நாளாகவே அதிமுகவின் "இரட்டை குழல் துப்பாக்கி"யான பாஜகவுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு பனிப்போர் நீடித்து வருகிறது. பாஜக கூட்டணி கூடவே கூடாது என்று ஒற்றைக் காலில் நின்று வருகிறார் தம்பிதுரை.

    ஆனால் பாஜகவுக்கு எதிராக அவர் எது பேசினாலும், "தம்பிதுரையின் கருத்து அவரது சொந்து கருத்துதான் என்றும், அதிமுகவின் கருத்து இல்லை" என்றும் அதிமுக தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. அதற்கேற்ற மாதிரி, நாடாளுமன்ற கூட்டணியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின் ஐவர் குழுவில் தம்பி துரையின் பெயரும் இடம் பெறவில்லை.

    பட்ஜெட் தாக்கல்

    பட்ஜெட் தாக்கல்

    இதனால் கட்சியிலிருந்து தம்பிதுரை கழட்டி விடப்படுகிறாரா, ஓரங்கட்டப்படுகிறாரா என்றே தெரியாமல் இருந்து வருகிறது. இதன் உச்சக்கட்டமாக இடைக்கால பட்ஜெட்டின்போதும் அவையில் தம்பிதுரை கலந்து கொள்ளாமல் இருந்தது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    தனிக்கட்சியா

    தனிக்கட்சியா

    பாஜகவை விமர்சித்து, அதிமுக தலைமையின் அதிருப்தியை சம்பாதித்து வருவதால், அவர் வேறு ஒரு கட்சியை ஆரம்பிக்க போவதாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் இப்போதுவரை அதிமுகவில் அவருக்கு ஆதரவாக யார் யார் இருக்கிறார்கள், என்ற விவரம் வெளிப்படையாக தெரியாமலும் உள்ளது. அதேசமயம்,"தனிக்கட்சி துவங்கும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை" என்றும் தெளிவுபடுத்தி விட்டார்.

    பாஜக எதிர்ப்பு

    பாஜக எதிர்ப்பு

    இப்படி அதிமுகவுக்கு எதிரான போக்கில் உள்ளதால் தம்பிதுரையை தன்பக்கம் இழுக்க பிரதான கட்சிகள் முயல்வதாக தெரிகிறது. முக்கியமாக திமுகவும், அமமுகவும்தான்! தம்பிதுரைக்கும், இந்த இரு கட்சிகளுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை பாஜகவை எதிர்ப்பதுதான். எனவே தம்பிதுரையை தன்வசப்படுத்த இரு கட்சிகளுமே முயற்சி செய்தாகவும், ஆனால் செந்தில்பாலாஜியை வைத்து தம்பிதுரையிடம் திமுக முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

    கனிமொழி

    கனிமொழி

    இந்நிலையில், கனிமொழி எம்பியும் இப்போது தம்பிதுரை குறித்து ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " தவறான கட்சியில் சரியான மனிதராக வாஜ்பாய் இருந்தது போன்று அதிமுகவில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இருக்கிறார்.

    வாஜ்பாயுடன் ஒப்பீடு

    வாஜ்பாயுடன் ஒப்பீடு

    பாஜக பற்றி தம்பிதுரைக்கு புரிந்த உண்மை விரைவில் அவரது கட்சியினருக்கும் புரியும்" என்று தெரிவித்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறார். ஒன்று, மறைந்த வாஜ்பாயுடன் தம்பிதுரையை ஒப்பிட்டு இந்த கருத்தை தெரிவித்து டெல்லியை திரும்பி பார்க்க வைத்துள்ளதுடன், தம்பிதுரையை திமுக பக்கம் இழுக்கும் முயற்சிகளையும் அவர் மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

    எதுவும் சாத்தியம்

    எதுவும் சாத்தியம்

    தம்பிதுரை தன் பக்கம் வருவதால் அதிமுக பலவீனமாவதுடன், பாஜகவுக்கு இதைவிட அசிங்கம் வேறு இருக்க முடியாது என்பதையும் திமுக நன்றாக உணர்ந்துள்ளது. தம்பிதுரையும் நல்ல ஆஃபர் கிடைத்தால் போகத் தயங்க மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது. பேக்கேஜ் அரசியலில் எதுவும் நடக்கலாம், எதுவும் சாத்தியம் என்பதால், தம்பிதுரையையும் திமுக தன் பக்கம் சாய்க்கும் என்று பலமாக நம்பப்படுகிறது.

    English summary
    MP Kanimozhi speak about M.Thambithurai compared with Vajpee.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X