சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழிசையை தோற்கடித்து முதல் முறையாக லோக்சபா எம்பியாகிறாரா திமுகவின் கனிமொழி?

Google Oneindia Tamil News

Recommended Video

    Exit poll 2019 | 38 இடங்களை திமுக வெல்லலாம்.. இந்தியா டுடே - ஆக்சிஸ் கருத்துக்கணிப்பு

    சென்னை: தமிழிசையை தோற்கடித்துவிட்டு முதல் முறையாக லோக்சபா எம்பியாக கனிமொழி தேர்வு செய்யப்படுவார் என கருத்து கணிப்பு முடிவுகள் சொல்கின்றன.

    திமுகவின் மாநிலங்களவை எம்பியாக கனிமொழி கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் முறையாக நியமனம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக நியமனம் செய்யப்பட்டார்.

    6 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்கிற நிலையில் இன்னும் சில மாதங்களில் கனிமொழியின் மாநிலங்களவை எம்பி பதவிக்காலம் முடிவடையும். இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு கொடுத்தார்.

    Exit poll: அதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம் Exit poll: அதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்

    தமிழிசை

    தமிழிசை

    அதன்பேரில் திமுக தலைவர் ஸ்டாலின், அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கினார். இந்த நிலையில் தூத்துக்குடியில் வீடு எடுத்து தங்கி தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டார் கனிமொழி. அவருக்கும் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசைக்கு கடும் போட்டி நிலவியது.

    நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பு

    நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பு

    தேர்தல் முடிவுகள் வரும் 23-ஆம் தேதி வரும் நிலையில் நியூஸ் எக்ஸ் நிறுவனத்தின் கருத்து கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.

    முதல் முறை லோக்சபா எம்பி

    முதல் முறை லோக்சபா எம்பி

    நியூஸ் எக்ஸ் நிறுவனம் கணித்தது போல் நிகழ்ந்து விட்டால் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்ற ஒரு பெருமை கிடைக்கும். மற்றொன்று பாஜக மாநில தலைவர் தமிழிசையை தோற்கடித்தார் என்பதாகும்.

    முதல் முறை

    முதல் முறை

    கருணாநிதி இல்லாமல் முதல் முறையாக திமுக போட்டியிட்ட முதல் லோக்சபா தேர்தல் இது. கருணாநிதிக்கு பதில் ஸ்டாலின் முதல் முறையாக நடத்திய நேர்காணல் இந்த தேர்தலில்தான். முதல் முறையாக தங்கை கனிமொழியிடம் அண்ணன் ஸ்டாலின் நடத்திய நேர்காணல் இது. இப்படியாக கனிமொழி வெற்றி பெற்றால் முதல் முறை லோக்சபா எம்பியாவார்.

    English summary
    News X channel Exit poll survey says that Kanimozhi will win in Tuticorin. If she wins she will become Loksabha MP for first time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X