சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு சிக்கலா? 2 வாரங்களில் பதில் வேண்டும்.. ஹைகோர்ட் நோட்டீஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    கனிமொழி பெற்ற வெற்றிக்கு சிக்கலா? ஹைகோர்ட் நோட்டீஸ்

    சென்னை: தூத்துக்குடி லோக்சபா தொகுதி எம்.பி.யான கனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விளக்கம் கேட்டு, ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    17வது லோக்சபாவுக்கு கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் மே மாதம் 19ம் தேதி வரை, 7 கட்டங்களாக பொதுத் தேர்தல் நடைபெற்றது.

    தமிழகத்தில் வேலூர் தவிர்த்து பிற 38 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 37 தொகுதிகளை திமுக கூட்டணி வென்றது. தேனி லோக்சபா தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

    திடீரென மருத்துவமனையில் சேர்ந்த அமித் ஷா.. அறுவை சிகிச்சை.. குவிந்த தொண்டர்கள்திடீரென மருத்துவமனையில் சேர்ந்த அமித் ஷா.. அறுவை சிகிச்சை.. குவிந்த தொண்டர்கள்

    விஐபி மோதல்

    விஐபி மோதல்

    இந்த தேர்தலின்போது தூத்துக்குடி தொகுதி விஐபி அந்தஸ்து பெற்றது. இதற்கு முக்கிய காரணம், அந்த தொகுதியில், பாஜக சார்பில் அக்கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், திமுக மகளிரணி தலைவர் கனிமொழி ஆகிய இருவரும் களமிறங்கியதுதான்.

    கனிமொழி வெற்றி

    கனிமொழி வெற்றி

    அனல் பறந்த போட்டியில், கனிமொழி 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றார். ஆனால், இப்போது இந்த வெற்றிக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கனிமொழி பெற்ற வெற்றியை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    திடீர் வழக்கு

    திடீர் வழக்கு

    வசந்தகுமார் தாக்கல் செய்த மனுவில், லோக்சபாத் தேர்தலில் போட்டியிட்ட கனிமொழி தாக்கல் செய்த வேட்பு மனுவில் முழுமையான விவரங்கள் இல்லை என்றும், முழுமையான விவரங்கள் இல்லாத கனிமொழியின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது சட்டவிரோதம் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    2 வாரங்கள்

    2 வாரங்கள்

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக கனிமொழி, இந்திய தேர்தல் ஆணையம் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. இந்த வழக்கில் எந்த மாதிரி தீர்ப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழிசை சவுந்தரராஜன், தற்போது, தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The High Court has issued a notice seeking an explanation over election victory of Kanimozhi, MP of the Tuticorin Lok Sabha constituency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X