சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம பிளானிங்.. தமிழிசையை தோற்கடித்த கனிமொழி.. முதல் முறையாக லோக்சபா எம்பியாகிறார்!

Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடியில் பக்காவாக பிளான் போட்டு தமிழிசையை தோற்கடித்த திமுகவின் கனிமொழி முதல் முறையாக லோக்சபா எம்பியாகிறார்.

திமுகவின் மாநிலங்களவை எம்பியாக கனிமொழி கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் முறையாக நியமனம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக நியமனம் செய்யப்பட்டார்.

6 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்கிற நிலையில் இன்னும் சில மாதங்களில் கனிமொழியின் மாநிலங்களவை எம்பி பதவிக்காலம் முடிவடையும். இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு கொடுத்தார்.

அமமுகவுக்கு பெரம்பூரில் கிடைத்த பேரதிர்ச்சி.. வெற்றிவேலை வீழ்த்திய மநீம, நாம் தமிழர்!அமமுகவுக்கு பெரம்பூரில் கிடைத்த பேரதிர்ச்சி.. வெற்றிவேலை வீழ்த்திய மநீம, நாம் தமிழர்!

தமிழிசை

தமிழிசை

அதன்பேரில் திமுக தலைவர் ஸ்டாலின், அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கினார். இந்த நிலையில் தூத்துக்குடியில் வீடு எடுத்து தங்கி தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டார் கனிமொழி. அவருக்கும் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசைக்கு கடும் போட்டி நிலவியது.

கனிமொழி வெற்றி

கனிமொழி வெற்றி

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்றைய தினம் நடைபெற்றது. அதில் கனிமொழி 5,63,143 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஜஸ்ட் மிஸ் ஆகி மாஸ் வெற்றி பெற்ற பாரிவேந்தர்.. கடைசி நேர அதிரடியால் எம்.பி. ஆன அதிசயம்!ஜஸ்ட் மிஸ் ஆகி மாஸ் வெற்றி பெற்ற பாரிவேந்தர்.. கடைசி நேர அதிரடியால் எம்.பி. ஆன அதிசயம்!

முதல் முறை லோக்சபா எம்பி

முதல் முறை லோக்சபா எம்பி

முதல் முறையாக லோக்சபா தேர்தலில் கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்ற ஒரு பெருமை கிடைத்துள்ளது. மற்றொன்று பாஜக மாநில தலைவர் தமிழிசையை தோற்கடித்தார் என்பதாகும்.

முதல் முறை

முதல் முறை

கருணாநிதி இல்லாமல் முதல் முறையாக திமுக போட்டியிட்ட முதல் லோக்சபா தேர்தல் இது. கருணாநிதிக்கு பதில் ஸ்டாலின் முதல் முறையாக நடத்திய நேர்காணல் இந்த தேர்தலில்தான். முதல் முறையாக தங்கை கனிமொழியிடம் அண்ணன் ஸ்டாலின் நடத்திய நேர்காணல் இது. இப்படியாக கனிமொழி வெற்றி பெற்றதால் முதல் முறை லோக்சபா எம்பியாகிறார்.

4 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை தட்டிவிட்ட அமமுக 4 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை தட்டிவிட்ட அமமுக

English summary
Kanimozhi became first time loksabha MP by winning in Tuticorin LS.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X