சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடும் எதிர்ப்பு எதிரொலி.. கந்த சஷ்டி கவசம் வீடியோவுக்காக மன்னிப்பு கேட்டது 'கறுப்பர் கூட்டம்'

Google Oneindia Tamil News

சென்னை: கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியிட்ட வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல், இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது. அந்த வீடியோவை நீக்கியுள்ளது.

Recommended Video

    கந்த சஷ்டி கவசம் வீடியோவுக்கு மன்னிப்பு கேட்டது 'கறுப்பர் கூட்டம்'

    கந்த சஷ்டி கவசம் குறித்த வீடியோ, இந்துக்களிடையே மட்டுமின்றி, மதம் கடந்த தமிழர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில், இந்த யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்ட உடல் அங்கம், சங்க இலக்கியங்களிலும் அதே வார்த்தையோடு கூறப்பட்ட வார்த்தை.

    தூய தமிழ் வார்த்தையை, மலினப்படுத்தி, ஆபாசப்படுத்தி பேசுவது தமிழுக்கு எதிரானது என்ற விமர்சனங்களும் பெருகின. இந்த நிலையில்தான், மன்னிப்பு கேட்டுள்ளது கறுப்பர் கூட்டம்.

    அடுத்த 6 மாதத்தில் வங்கிகளில் வாராக்கடன் இதுவரை இல்லாத அளவு அதிகரிக்க போகுது.. ராஜன் வார்னிங் அடுத்த 6 மாதத்தில் வங்கிகளில் வாராக்கடன் இதுவரை இல்லாத அளவு அதிகரிக்க போகுது.. ராஜன் வார்னிங்

    மன்னிப்பு

    மன்னிப்பு

    கந்த சஷ்டி கவசம் குறித்து நாங்கள் வெளியிட்ட வீடியோ எங்களை நேசிக்கும் பலரின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக அமைந்துள்ளது என்பதை நாங்கள் இப்போது அறிந்தோம். ஆதலால், எங்கள் யூடியூப் பக்கம் உள்பட பேஸ்புக் பக்கத்திலிருந்தும் அந்த வீடியோவை நீக்கிவிட்டோம். காயப்படுத்தியிருந்தால் எங்களை மன்னிக்கவும், என்று கறுப்பர் கூட்டம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    பாஜக புகார்

    பாஜக புகார்

    முன்னதாக பாஜக சார்பில் வீடு வீடாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது, பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் பால் கனகராஜ் அளித்த அந்த புகாரில், இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19 (1) A பேச்சுரிமையை குடிமக்களுக்கு வழங்கி இருந்தாலும் கூட அது கட்டுப்படுத்தப்பட்ட உரிமைதான். என்று கூறப்பட்டிருந்தது.

    தண்டனைக்குரிய குற்றம்

    தண்டனைக்குரிய குற்றம்

    இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 295a கீழ் யார் ஒருவரும் தங்களுடைய கருத்து சுதந்திரம் அல்லது பேச்சுரிமையை பிற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்த பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்தால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் வெவ்வேறு மதத்தினர் இடையே பகைமையை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

    சேனலுக்கு தடை

    சேனலுக்கு தடை

    எனவே, கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு எதிராக கிரிமினல் குற்ற வழக்கை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதில் பேசிய சுரேந்திர நடராஜன் என்பவர், மீது இந்திய தண்டனைச் சட்டங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் போன்றவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அந்த சேனல் தகவல் தொழில்நுட்ப சட்டம் 69a பிரிவின் கீழ் தடை செய்யப்பட வேண்டும். பக்தர்களின் குமுறலை அதிகப்படுத்தி விடாமல் இருப்பதற்காக, கூடிய விரைவில் இந்த நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. சட்டப் போராட்டம், கடும் எதிர்ப்புகள் இடையே, வீடியோவை நீக்கியுள்ளது கறுப்பர் கூட்டம்.

    English summary
    karuppar koottam you tube channel asking apology for Kantha Sasti Kavasam video.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X