சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

50 ஆண்டுகளுக்குப் பின்... கன்னியாகுமரி லோக்சபா இடைத் தேர்தல்... காமராஜருக்கு ஃபைட் கொடுத்த திமுக!!

Google Oneindia Tamil News

சென்னை: கன்னியாகுமரி லோக் சபா தொகுதி எம்பியாக இருந்த வசந்த குமார் மரணம் அடைந்து இருப்பதையடுத்து, 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தத் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இன்னும் இங்கு இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

முன்பு இந்த தொகுதி நாகர்கோவில் தொகுதி என்று அழைக்கப்பட்டு வந்தது. முன்பு 1969ஆம் ஆண்டில் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து இருந்தது.

 "பாரு.. பாரு.. சுவர் விளம்பரத்துக்கு அடித்துக் கொள்ளும் பாஜக - திமுக".. ராமதாஸ் போட்ட கிண்டல் ட்வீட்

திமுக

திமுக

விருதுநகர் சட்டசபை இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் கே. காமராஜர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து அங்கு பெரிய அளவில் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே வன்முறை வெடித்து இருந்தது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

இந்த தொகுதியில் எம்பியாக இருந்த ஏ. நேசமணி 1968ஆம் ஆண்டில் மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதியில் இடைத்தேர்தலுக்கு சென்றது. இந்த தொகுதியில் காமராஜுக்கு இருக்கும் செல்வாக்கை அடுத்து அவரை நிறுத்துவதற்கு காங்கிரஸ் முடிவு செய்து இருந்தது. இவர் 1967 சட்டசபை தேர்தலில் விருதுநகரில் தோல்வி அடைந்து இருந்தார்.

எம்.மாத்தியாஸ்

எம்.மாத்தியாஸ்

அப்போது நாகர்கோவில் என்று அழைக்கப்பட்டு வந்த கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவதற்கு காமராஜ்க்கு கடுமையான போட்டி ஏற்பட்டது. இவரை எதிர்த்து ஸ்வதந்திர கட்சியைச் சேர்ந்த எம்.மாத்தியாசை காமராஜ் 1,28,201 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அண்ணா

அண்ணா

இங்கு அப்போது திமுக ஆதரவுடன் தேர்தலில் மாத்தியாஸ் சுயேட்சையாக சந்தித்து இருந்தார். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கருணாநிதியிடம் தொகுதி வேலைகளை மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா ஒப்படைத்து இருந்தார். ஆனாலும், காமராஜை தோற்கடிக்க முடியவில்லை.

ஏ. நேசமணி

ஏ. நேசமணி

எப்போது கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்ததோ அப்போது இருந்தே காங்கிரஸ் ஆதரிக்கும் கட்சிதான் லோக் சபா தேர்தலில் வெற்றியை பெற்று வந்துள்ளது. 1951ல் நடந்த தேர்தலில் மார்ஷல் ஏ. நேசமணி வெற்றி பெற்று இருந்தார். இதையடுத்து, 1957ல் பி. தாணுலிங்க நாடார் வெற்றி பெற்று இருந்தார். மீண்டும் 1962, 1967 தேர்தலிலும் மார்ஷல் ஏ. நேசமணி வெற்றி பெற்று இருந்தார்.

என். டென்னிஸ்

என். டென்னிஸ்

இவரது மறைவை அடுத்தே காமராஜர் 1969ல் காமராஜ் போட்டியிட்டார். அதுதான் இந்த தொகுதியில் நடந்த இடைத்தேர்தல். இவரையடுத்து 1977ல் குமரி ஆனந்தன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980 என். டென்னிஸ் வெற்றி பெற்றார். 1984, 1989, 1991, 1996, 1998 ஆம் ஆண்டுகளிலும் டென்னிஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பொன். ராதாகிருஷ்ணன்

பொன். ராதாகிருஷ்ணன்

1996, 1998 ஆகிய ஆண்டுகளில் மூப்பனார் காங்கிரஸ் சார்பில் டென்னிசன் போட்டியிட்டு இருந்தார். இதையடுத்து 1999ல் நடந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று இருந்தார். இந்த ஆண்டில்தான் டென்னிஸ் தோற்கடிக்கப்பட்டார்.

திமுக வெற்றி

திமுக வெற்றி

2004ஆம் ஆண்டில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி சார்பில் ஏ.வி. பெல்லார்மின் வெற்றி பெற்று பொன். ராதாகிருஷ்ணன் தோற்கடிக்கப்பட்டு இருந்தார். 2008ஆம் ஆண்டு தேர்தலில் நாகர்கோவில் என்பது கன்னியாகுமரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2009 தேர்தலில் திமுகவில் இருந்து போட்டியிட்ட ஜெ. ஹெலன் டேவிட்சன் வெற்றி பெற்று இருந்தார்.

கிறிஸ்துவர்கள்

கிறிஸ்துவர்கள்

மீண்டும் 2014ல் நடந்த தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று இருந்தார். இந்த தொகுதியில் 2017ஆம் ஆண்டின் மாவட்ட புள்ளி விவரத்தின்படி 51% இந்துக்களும், 44% கிறிஸ்துவர்களும் உள்ளனர். 2019ல் கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு இருந்த வசந்தகுமார் வெற்றி பெற்று இருந்தார். சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இவர் மரணம் அடைந்து இருக்கும் நிலையில் கன்னியாகுமரி லோக் சபா தொகுதி 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இடைத்தேர்தலை சந்திக்கிறது.

இதே தொகுதியில்தான் 2014ல் நடந்த தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணனனை எதிர்த்து போட்டியிட்ட வசந்த குமார் தோல்வி அடைந்து இருந்தார்.

English summary
Kanyakumari lok sabha is going to by election after 50 years
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X