சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் தற்கொலை ஏன்?.. கராத்தே தியாகராஜன்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலத்தின் மரணத்திற்கு திமுக அரசு தான் காரணம் என்று நாங்கள் கூறவில்லை. தற்கொலைக்கான காரணத்தை அரசு கண்டறிய வேண்டும் என்று தான் கூறுகிறோம் என பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் பால்கனகராஜ் மற்றும் முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் பேட்டி அளித்துள்ளார்.

முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் தற்கொலை குறித்து செய்தியாளர் சந்திப்பு தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நேற்று மாலை நடந்தது.

இதில் பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநிலத் தலைவர் பால் கனகராஜ் மற்றும் முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரோசய்யாவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு - தமிழக ஆளுநர், முதல்வர் இரங்கல் ரோசய்யாவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு - தமிழக ஆளுநர், முதல்வர் இரங்கல்

மாசு கட்டுப்பாட்டு வாரியம்

மாசு கட்டுப்பாட்டு வாரியம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பால்.கனகராஜ் பேசுகையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பல நல்ல நடவடிக்கைகளை எடுத்தவர் வெங்கடாச்சாலம். வெங்கடாச்சலத்தின் மரணம் பல சந்தேகங்களை எழுப்புவதாகவும், யாராக இருந்தாலும் உயிர் மிகவும் முக்கியமானது. தற்கொலைக்கு காரணமாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

வெங்கடாச்சலம் மரணம்

வெங்கடாச்சலம் மரணம்

வெங்கடாச்சலத்தின் மரணத்திற்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். வெங்கடாசலத்தின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டறிய வேண்டுமானால் தமிழ்நாடு அரசு காவல்துறை விசாரிக்க கூடாது எனவும் கூறினார்.

திமுக அரசு

திமுக அரசு

வெங்கடாச்சலத்தின் மரணத்திற்கு திமுக அரசு தான் காரணம் என்று நாங்கள் கூறவில்லை. தற்கொலைக்கான காரணத்தை அரசு கண்டறிய வேண்டும் என்று தான் கூறுகிறோம் என கராத்தே தியாகராஜன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் தற்கொலை எண்ணத்தில் இல்லாத வெங்கடாச்சலம் தற்கொலை செய்துள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது.

Recommended Video

    மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் மரணத்தில் சந்தேகம் உள்ளது - வழக்கறிஞர் இன்பதுரை
    சமரசம்

    சமரசம்

    பதவி உயர்வுக் கோரி வெங்கடாச்சலம் மனுத்தாக்கல் செய்ய இருந்தார். ஆனால் அவரிடம் சமரசம் பேசப்பட்டுள்ளது எனவும், வெங்கடாச்சலத்தின் மரணத்திற்கு லஞ்ச ஒழிப்புத் துறை தான் காரணம் என்றும்,‌ பொது நலன் கருதி தான் சிபிஐ விசாரணை கேட்கிறோம். மேலும் முதலமைச்சர் தாமக முன்வந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார்.

    English summary
    BJP Karate Thiyagarajan asked TN government to conduct enquiry about Venkatachalam's suicide.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X