சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிதம்பரமே சும்மா இருக்காரு.. கே எஸ் அழகிரி ஏன் முந்திரி கொட்டையாட்டம் விமர்சிக்கிறாரு?.. கராத்தே

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினி மீண்டும் மகாபாரதத்தை படிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு!

    சென்னை: காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய ரஜினியை ப.சிதம்பரமே விமர்சிக்காமல் இருக்கும் போது கே எஸ் அழகிரி ஏன் முந்திரிக் கொட்டை மாதிரி விமர்சிக்கிறார் என கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    சென்னையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் காஷ்மீர் விவகாரத்தில் 370 சட்டப்பிரிவை நீக்கி அதை சாத்தியப்படுத்தியமைக்கு அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்தார்.

    மேலும் மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணன் அர்ஜுனன் போன்றவர்கள் என்றும் தெரிவித்திருந்தார். ரஜினியின் இந்த பேச்சு அரசியல்ரீதியாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

    இங்கிட்டு பாக்... அங்கிட்டு சீனா.. தெரிந்தே நெருப்பில் கைகளை சுட்டுக் கொண்ட மத்திய அரசு.. காங். இங்கிட்டு பாக்... அங்கிட்டு சீனா.. தெரிந்தே நெருப்பில் கைகளை சுட்டுக் கொண்ட மத்திய அரசு.. காங்.

    அர்ஜுனன் யார்

    அர்ஜுனன் யார்

    காஷ்மீர் விவகாரத்தில் ரஜினிகாந்த், அமித்ஷாவை பாராட்டியுள்ளதை எதிர்பார்க்கவில்லை. அவருடைய இந்த கருத்தை படித்த பிறகு மிகவும் சோர்வடைந்தேன். மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணன், அர்ஜுனன் என கூறியுள்ளார் ரஜினி. இதில் கிருஷ்ணன் யார் , அர்ஜுனன் யார் என்பது தனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.

    கராத்தே தியாகராஜன்

    கராத்தே தியாகராஜன்

    இருவரும் துரியோதனன், சகுனி ஆவார்கள். எனவே அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களே தயவு செய்து மகாபாரதத்தை திரும்பவும் சரியாக படியுங்கள் என கேட்டுக் கொள்வதாக கே எஸ் அழகிரி கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து ரஜினியை ப சிதம்பரமும் மு க ஸ்டாலினும் விமர்சனம் செய்யாத போது கே எஸ் அழகிரி ஏன் முந்திரிக் கொட்டை போல் செயல்படுகிறார் என கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    வாய்த் திறக்கவில்லை

    வாய்த் திறக்கவில்லை

    இதுகுறித்து அவர் தமிழ் தொலைகாட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில் ரஜினியை மகாபாரதம் படிக்கச் சொல்லும் கே எஸ் அழகிரி முதலில் தனக்கு தலைவர் பதவி வாங்கிக் கொடுத்த ப சிதம்பரமும் கூட்டணி கட்சித் தலைவர் முக ஸ்டாலினும் ஏன் இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் இருக்கிறார்கள் என கேட்பாரா.

    புரிதல்

    புரிதல்

    ரஜினி பேசிய அன்றைய தினமே சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கூட்டத்தில் ப சிதம்பரம் ஏன் அது பற்றி பேசவில்லை. அவர் ரஜினி குறித்து பேச மாட்டார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இரண்டு பேருக்கும் புரிதல் இருக்கிறது.

    முக ஸ்டாலினும்

    முக ஸ்டாலினும்

    ப சிதம்பரமும் முக ஸ்டாலினும் இது குறித்து கருத்து தெரிவிக்காத நிலையில் கே எஸ் அழகிரி எதற்காக முந்திரி கொட்டையாக முந்திக் கொணடு விமர்சிக்கிறார். காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இரட்டை நிலைப்பாடுகள் உள்ளன. இதெல்லாம் அழகிரிக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    Karate Thiyagarajan asks that Why TN Congress Committee President K.S.Alagiri criticises Rajinikanth on his Kashmir issue?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X