சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொண்டையில் தாழம்பூ.. நெஞ்சிலே வாழைப்பூ.. தென் சென்னையில் எந்த பூ... குஷ்பூ??

தென்சென்னை யாருக்கு.. கராத்தே தியாகராஜன்? குஷ்பு? கடும் போட்டி எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    குஷ்பு VS கராத்தே தியாகராஜன் : தென் சென்னையில் போட்டியிடப் போவது யாரோ?- வீடியோ

    சென்னை: தென்சென்னை தொகுதிக்கு அப்படி என்ன ஒரு ஈர்ப்போ.. பெரும்பாலானோரின் கண் தென்சென்னை மீதுதான் இருக்கிறது!

    காங்கிரசுக்கு 10 தொகுதிகள் தந்தாகிவிட்டது. இதில் ஒன்று பாண்டிச்சேரி.. அதைவிட்டு விடுவோம். மீதம் இருப்பது 9 தொகுதிகள்தான்.இந்த 9 தொகுதிகளை எந்த கோஷ்டிக்கு யாருக்கு பிரித்து தருவது என்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

    இதில் தென்சென்னை தொகுதியை எம்பி மைத்ரேயன் கேட்டார். ஆனால் தர வாய்ப்பில்லை என்று அதிமுக சொல்லிவிட்டது. அதே தொகுதியை தமிழிசை சவுந்தராஜன் கேட்டு பார்த்தார். அதற்கு முடியவே முடியாது என்ற அதிமுக தலைமை மறுத்தது. இதற்கெல்லாம் காரணம் இங்கு அமைச்சர் ஜெயக்குமார் மகனும் இப்போதைய சிட்டிங் எம்பியுமான ஜெயவர்தன் திரும்பவும் போட்டியிட வாய்ப்பு இருப்பதால்தான்!

     </a></strong><a class=திமுக கூட்டணி நாற்பதுக்கு நாற்பது வெல்வது உறுதி... வைகோ நம்பிக்கை " title=" திமுக கூட்டணி நாற்பதுக்கு நாற்பது வெல்வது உறுதி... வைகோ நம்பிக்கை " /> திமுக கூட்டணி நாற்பதுக்கு நாற்பது வெல்வது உறுதி... வைகோ நம்பிக்கை

    பொறுப்பு

    பொறுப்பு

    இப்படி அதிமுக கூட்டணியைபோலவே திமுக கூட்டணி பக்கமும் தென்சென்னைக்கு குறி வைத்துள்ளனர். போட்டியிட விரும்புவர்களில் முதலாவது கராத்தே தியாகராஜன்தான்! இவருக்கு இந்த தொகுதி அத்துப்படி. கட்சியில் நீண்ட காலம் பொறுப்பில் உள்ளவர். தொகுதியில் எப்பவுமே பிரபலமாக இருப்பவர்.

    சிதம்பரம் ஆதரவாளர்

    சிதம்பரம் ஆதரவாளர்

    ஸ்டாலினுக்கு நெருக்கமானவர், ரஜினிகாந்துக்கும் நெருக்கமானவர். திருநாவுக்கரசுக்கும் நெருக்கமானவர். இப்படி சொல்லி கொண்டே போகலாம் என்பது பிளஸ் பாயிண்டுகளாக உள்ளது. ஆனால் இவர் பா.சிதம்பரத்தின் ஆதரவாளர் என்பதுதான் காங்கிரஸ் தலைமைக்கு கொஞ்சம் இடிக்கிற விஷயம். அதனால் சீட் தருவது எந்த அளவுக்கு சாத்தியம் ஆகும் என்று தெரியாது.

    கருத்து வேறுபாடு

    கருத்து வேறுபாடு

    இன்னொரு பக்கம் இதே தென்சென்னை தொகுதிக்கு குஷ்புவின் பெயர் அடிபடுகிறது. ஏற்கனவே கராத்தேதியாகஜனுக்கும் குஷ்புக்கும் ஆகாது. கடந்த 2017-ம் ஆண்டே "எல்லாரும் கட்சியின் உறுப்பினராக சேர்ந்துதானே பொதுக்குழு உறுப்பினர்கள் ஆவார்கள்? குஷ்பு மட்டும் என்ன விதிவிலக்கு? என்று அன்றே கேள்வி எழுப்பியவர்.

    ராஜாஜி பேரன்

    ராஜாஜி பேரன்

    அதுவும் இல்லாமல் குஷ்பு ஈவிகேஎஸ் ஆதரவாளரும்கூட! அதனால் தென்சென்னை குஷ்புக்கா? அல்லது கராத்தே தியாகராஜனுக்கா என்பதுதான் கேள்வியாக உள்ளது. மற்றொரு பக்கம் மூதறிஞர் ராஜாஜியின் பேரன் சி.ஆர்.கேசவன் போட்டியிட போகிறார் என்று மற்றொரு தகவலும் வருகிறது.

    யாருக்கு வெற்றி?

    யாருக்கு வெற்றி?

    ஒருவேளை குஷ்பு வேட்பாளராக நிறுத்தப்பட்டால், அவர் வெற்றி பெறுவது கடினம்தான் என்றும் கராத்தே தியாகராஜனுக்கு இருக்கும் செல்வாக்கு, அனுபவம், திறமை குஷ்புக்கு இல்லை என்பதே பொதுவான கருத்து. அதனால் சீட் யாருக்கு தர போகிறார்கள் என்பதை பொறுத்திருந்ததுதான் பார்க்க வேண்டும்!

    English summary
    Controversy between Karate Thiyagarajan and Kushboo who is contesting in South Chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X