சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மதிமுக- காங் இடையே பிரச்சினை.. திமுக மவுனம் ஏன்?.. ஸ்டாலினின் குரலாக ஒலிக்கும் வைகோ?.. கராத்தே

Google Oneindia Tamil News

Recommended Video

    வைகோ மீது கடும் கோபத்தில் காங்கிரஸ்.. காரணம் இதுதான் !

    சென்னை: மதிமுக காங்கிரஸ் இடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில் திமுக மவுனம் சாதிப்பதை பார்த்தால் ஸ்டாலினின் குரலாகவே வைகோ ஒலிப்பதாக தெரிகிறது என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

    காஷ்மீர் பிரச்சினைக்கு முக்கிய காரணம் காங்கிரஸ்தான் என்றும் அக்கட்சிதான் முதல் குற்றவாளி என்றும் 370 சட்டப்பிரிவு மசோதா நீக்கம் குறித்து மாநிலங்களவையில் வைகோ பேசியிருந்தார். இதற்கு கே எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டார்.

    அப்போது அவர் கூறுகையில், கே எஸ் அழகிரிக்கு அரசியல் நாகரீகம் இல்லை. அவர் எந்தக் கட்சிக்கும் உண்மையாக இருந்ததில்லை என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

    2 வாரம் அவர் பார்த்துக்கட்டுமே.. ஐடியா சொன்ன அமித் ஷா.. ஓபிஎஸ் ஹாப்பி.. அதிமுகவில் என்ன நடக்குமா?2 வாரம் அவர் பார்த்துக்கட்டுமே.. ஐடியா சொன்ன அமித் ஷா.. ஓபிஎஸ் ஹாப்பி.. அதிமுகவில் என்ன நடக்குமா?

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனோ, காங்கிரஸ் தயவால் எம்பியானவர் வைகோ என தெரிவித்திருந்தார். இதனால் மிகவும் கோபம் கொண்ட வைகோ, நான் காங்கிரஸ் கட்சியின் தயவால் எம்பியாகவில்லை.

    வைகோ விமர்சனம்

    வைகோ விமர்சனம்

    திமுக உறுப்பினர்கள், முக ஸ்டாலினால் மட்டுமே நான் எம்பியானேன். இது வரை நான் காங்கிரஸ் தயவில் எம்பியானதே இல்லை. இனியும் ஆகமாட்டேன். இனத்தையே அழித்த கொலைக்கார பாவிகள் காங்கிரஸ் கட்சியினர் என வைகோ கடுமையாக விமர்சித்தார்.

    கராத்தே தியாகராஜன்

    கராத்தே தியாகராஜன்

    இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணியிடையே விரிசல் ஏற்படும் என அரசியல் பார்வையாளர்கள் கருதினர். இந்த நிலையில் வைகோவின் கருத்துக்கு முக ஸ்டாலின் பதில் அளிக்காமல் அமைதி காப்பது ஏன் என கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ரஜினி

    ரஜினி

    கட்சிக்கு எதிராக செயல்படுவதாக தென்சென்னை மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து கராத்தே தியாகராஜன் அண்மையில் நீக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் தமிழ் தொலைகாட்சி சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் ரஜினி மகாபாரதத்தை திரும்ப சரியாக படிக்க வேண்டும் என கே எஸ் அழகிரி எப்படி விமர்சிக்கலாம்.

    ஏன் இந்த மாற்றம்

    ஏன் இந்த மாற்றம்

    1996-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட கே எஸ் அழகிரி சைக்கிள் சின்னத்திற்கு வாக்கு கேட்கும் போது இது அண்ணாமலை சைக்கிள், சூப்பர் ஸ்டாலின் சின்னம் என்று கேட்டுத்தான் வாக்கு சேகரித்தார். இப்படியல்லாம் ஏன் மாற்றி பேச வேண்டும்.

    இனிமையான எதிரி

    இனிமையான எதிரி

    என்ஐஏ மசோதாவுக்கு திமுக ஆதரவு அளித்தது எப்படி இருக்கிறது தெரியுமா, அதாவது ஸ்டாலின் தமிழக பாஜகவை எதிர்ப்பது போன்றும் அதே நேரத்தில் அமித்ஷா, மோடிக்கு ஆதரவாக இருப்பது போன்றும் உள்ளது. டி ஆர் பாலு, நாடாளுமன்றத்தில் பாஜகவினரை இனிமையான எதிரிகள் என்றார். எதிரியில் என்ன இனிமையான எதிரி?

    கராத்தே தியாகராஜன்

    கராத்தே தியாகராஜன்

    வைகோ காங்கிரஸ் இடையேயான பிரச்சினை குறித்து முக ஸ்டாலின் இதுவரை ஏன் வாய்திறக்கவில்லை. என்னை பொறுத்தவரை இந்த விவகாரத்தில் முக ஸ்டாலினின் குரலாகத்தான் வைகோ ஒலிக்கிறார். இன்னும் 2, 3 மாதங்களில் இருந்து தலைவர் பொறுப்பிலிருந்து கே எஸ் அழகிரி மாற்றப்படுவார் என்றார் கராத்தே தியாகராஜன்.

    English summary
    Karate Thiyagarajan asks why MK Stalin remains silent over Vaiko and Congress issue?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X