சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னை நீக்குமாறு காங்கிரஸுக்கு அழுத்தம் கொடுத்ததே திமுகதான்.. கராத்தே தியாகராஜன்

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை: கட்சிக்கு எதிரான செயல்பாடு..! காங்கிரசில் இருந்து கராத்தே தியாகராஜன் நீக்கம்...

    சென்னை: என்னை தென் மாவட்ட தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறு அழுத்தம் கொடுத்ததே திமுகதான் என கராத்தே தியாகராஜன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பேசிய கராத்தே தியாகராஜன், உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என பேசியிருந்தார். இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அங்கிட்டு 'தங்கம்'... இங்கிட்டு கலைச்செல்வன்'... தினகரனை விட்டு போய் திக்கு தெரியாமல் திகைப்பு! அங்கிட்டு 'தங்கம்'... இங்கிட்டு கலைச்செல்வன்'... தினகரனை விட்டு போய் திக்கு தெரியாமல் திகைப்பு!

    பதிலடி

    பதிலடி

    இந்த நிலையில் குடிநீர் பிரச்சினை குறித்து திமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சர் கே.என் நேரு பேசுகையில் எத்தனை நாட்கள்தான் காங்கிரஸுக்கு பல்லக்கு தூக்குவது?. உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என பதிலடி கொடுத்தார்.

    புதிய விளக்கம்

    புதிய விளக்கம்

    இதுகுறித்து கராத்தே தியாகராஜனிடம் கேட்டபோது, திருச்சி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற திருநாவுக்கரசர் தான் வெற்றி பெற்றதற்கு தனது செல்வாக்கு மட்டுமே காரணம் என கூறியிருந்ததால் கேஎன் நேரு அவ்வாறு தெரிவித்தார் என புதியதொரு விளக்கத்தை கூறியிருந்தார்.

    கராத்தே தியாகராஜன்

    கராத்தே தியாகராஜன்

    இது திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் சென்னை மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து கராத்தே தியாகராஜன் நீக்கப்பட்டார். இந்த நிலையில காமராஜ் பிறந்தநாள் விழா மற்றும் தென் சென்னை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அடையாறில் உள்ள கராத்தே தியாகராஜன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

    காட்டம்

    காட்டம்

    அப்போது கராத்தே தியாகராஜன் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசுகையில் கருணாநிதியை தமிழர் இல்லை என்று கூறியவர் நடிகை குஷ்பு. இதற்கான ஆடியோ என்னிடம் உள்ளது. என்னை நீக்கியதற்கு திமுகவின் பங்கு அதிகமாக இருப்பதாக கராத்தே தியாகராஜன் காட்டமாக தெரிவித்தார்.

    English summary
    Karate Thiyagarajan says that DMK is behind his removal from his post in Congress. It gives pressure to remove me from Congress.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X