சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்குநேரியில் காங். தோற்றால் திமுக காரணம்.. உள்ளாட்சி தேர்தலில் ஜெயிச்சா.... கராத்தேவின் செம லாஜிக்

Google Oneindia Tamil News

சென்னை: நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி தோற்றால் அதற்கு திமுகதான் காரணம் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் மேயருமான கராத்தே தியாகராஜன் திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் போட்டியிட வேண்டும் என ஒரு கருத்தை கூறினார்.

இதனால் தென்சென்னை மாவட்ட தலைவராக இருந்த கராத்தே தியாகராஜனை அப்பதவியிலிருந்து காங்கிரஸ் தலைமை நீக்கியது. இந்த நிலையில் கராத்தே திமுகவை எதிர்த்து அவ்வப்போது கருத்துகளை கூறி வருகிறார்.

சட்டசபை தேர்தல்

சட்டசபை தேர்தல்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் டிவி நிகழ்ச்சியில் பேசிய கராத்தே தியாகராஜன், தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதியின் வெற்றிடத்தை நிரப்பப் போவது ரஜினிதான். 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெறுவார்.

மாற்றுக் கட்சிகள்

மாற்றுக் கட்சிகள்

2021-ஆம் ஆண்டு ஸ்டாலினுக்கும் ரஜினிக்கும்தான் போட்டி இருக்கும். அதில் அண்ணன் ரஜினிகாந்த் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராவார். அப்போது மாற்றுக் கட்சிகளில் உள்ளவர்கள் ரஜினியை நிச்சயம் ஆதரிப்பர் என்றார்.

வேட்பாளர்

வேட்பாளர்

இந்த நிலையில் நேற்று நடந்த சிவாஜி பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு சிவாஜியின் சிலைக்கு கராத்தே தியாகராஜன் மரியாதை செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வெற்றி பெற வேண்டும்.

காமராஜர் அரங்கம்

காமராஜர் அரங்கம்

ஒரு வேளை அவர் தோல்வியுற்றால் அதற்கு திமுகதான் காரணமாக இருக்கும். இதே உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அதற்கு காங்கிரஸ்தான் காரணம் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் சிவாஜிக்கு சிலை அமைக்க வேண்டும் என்றார்.

English summary
Karate Thiyagarajan says that if congress candidate loses in Nanguneri, then DMK is the only reason for the failure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X