சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2020 ஏப்ரலில் கட்சித் தொடங்குகிறார் ரஜினி.. கராத்தே தியாகராஜன் தகவல்.. இது அவருக்கு தெரியுமா!

Google Oneindia Tamil News

Recommended Video

    அத்திவரதரை தரிசித்த ரஜினி குடும்பம்..! மனமுருக வழிப்பட்ட லதா ரஜினிகாந்த்...

    சென்னை: 2020-ஆம் ஆண்டு ஏப்ரலில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குகிறார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

    ரஜினிகாந்த் கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என தெரிவித்தார். இதன் மூலம் தான் அரசியலுக்கு வர தயார் என ரசிகர்களுக்கு சிக்னல் கொடுத்தார்.

    இதையடுத்து அவர் அதே ஆண்டு டிசம்பர் 2017-ஆம் ஆண்டு 31-ஆம் தேதி மீண்டும் ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது நான் அரசியலுக்கு வருகிறேன். புதிதாக கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் நாம் போட்டியிடுவோம். அதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டன. இன்னும் அம்பு எய்துவது மட்டும்தான் பாக்கி கண்ணா என்றார்.

    மதிமுக- காங் இடையே பிரச்சினை.. திமுக மவுனம் ஏன்?.. ஸ்டாலினின் குரலாக ஒலிக்கும் வைகோ?.. கராத்தேமதிமுக- காங் இடையே பிரச்சினை.. திமுக மவுனம் ஏன்?.. ஸ்டாலினின் குரலாக ஒலிக்கும் வைகோ?.. கராத்தே

    சேர்க்கை

    சேர்க்கை

    இது ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக அமைந்தது. இவ்வாறு அறிவித்த அடுத்த நாளே ரஜினி ரசிகர் மன்றம் என்பதை தொடங்கினார். இதற்கு ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையையும் தொடங்கி வைத்தார்.

    ரசிகர்கள் கலக்கம்

    ரசிகர்கள் கலக்கம்

    ரஜினிகாந்த் இத்தனை வேகமாக செயல்பட்டதால் விரைவில் அவர் கட்சியை தொடங்கிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக எந்த வித முன்னேற்றமும் இல்லை. எந்த தேர்தலிலும் ரஜினி போட்டியிடவில்லை. இதனால் ரசிகர்கள் கலக்கமடைந்தனர்.

    சட்டசபை தேர்தல்

    சட்டசபை தேர்தல்

    இந்த நிலையில் தமிழக இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு ரஜினி கூறுகையில் எங்கள் இலக்கு 234 தொகுதிகள் என்றார். இதனால் ரஜினி 2021-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என கூறப்பட்டது.

    அரசியல் நோக்காளர்கள்

    அரசியல் நோக்காளர்கள்

    2021-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட அந்த கட்சியானது தொடங்கி ஓராண்டு ஆக வேண்டும். எனவே அடுத்த ஆண்டு 2020-இல் மார்ச், ஏப்ரலில் கட்சி தொடங்கினால் அடுத்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் ரஜினி கட்சி போட்டியிடலாம் என அரசியல் நோக்காளர்கள் தெரிவித்தனர்.

    ரஜினி

    ரஜினி

    இந்த நிலையில் ரஜினியின் நண்பரும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான கராத்தே தியாகராஜன் கூறுகையில் அடுத்த வருடம் ஏப்ரலில் ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் போது நிச்சயமாக மிகப்பெரிய சக்தியாக உருவெடுப்பார். தமிழகத்தில் கருணாநிதி ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார் என்று தெரிவித்தார். எதுவாகினும் ரஜினியாகவே வாயை திறந்து தான் கட்சி தொடங்கும் தேதியை அறிவிக்கும் வரை அனைத்தையும் கடந்து செல்வோம்.

    English summary
    Karate Thiyagarajan says that Rajinikanth will start his political party by Next year 2020 March, April.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X