சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினி "கட்சியில்" குழப்பம்.. தமிழருவி மணியன் ராசியில்லாதவர்.. கராத்தே தியாகராஜன் திடீர் போர்க்கொடி!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழருவி மணியனை முதல்வர் வேட்பாளராக ரஜினி அறிவிப்பாரா என்ற கேள்விக்கு 1000 சதவீதம் அதெல்லாம் இல்லை என்றும் அவர் ராசியில்லாத தலைவர் என்றும் ரஜினியின் ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    அரசியலுக்கு வருவாரா ? மாட்டாரா ? ரஜினியின் முடிவுதான் என்ன ?

    ரஜினிகாந்தின் நெருங்கிய ஆதரவாளராக இருந்து வருபவர் கராத்தே தியாகராஜன். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்த போதிலும் ரஜினிக்கு ஆதரவாகவே இருந்து வந்தார். அரசியல் களத்தில் ரஜினிக்கும் ஸ்டாலினுக்கும்தான் போட்டி என அடிக்கடி கூறி வந்தார்.

    கட்டி வைத்த கனவு கோட்டை.. ஒரே பேட்டியில் அடித்து நொறுக்கிய ரஜினிகாந்த்.. காலியான பாஜகவின் திட்டம்! கட்டி வைத்த கனவு கோட்டை.. ஒரே பேட்டியில் அடித்து நொறுக்கிய ரஜினிகாந்த்.. காலியான பாஜகவின் திட்டம்!

    பூசி மொழுகினார்

    பூசி மொழுகினார்

    அதிமுக போட்டியிலேயே இருக்காது என்றும் கூறியவர். அவர் இந்த ஆண்டு எப்படியும் கட்சி தொடங்கிவிடுவார் என கூறி வருகிறார். இன்று காலைகூட தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கராத்தே, ரஜினி இன்று கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றே கூறியிருந்தார். ஆனால் நடந்ததோ வேறு. ரஜினி தான் அரசியலுக்கு வர மாட்டேன் என்பதை மிகவும் நாசுக்காக அப்படியே ரசிகர்களை கவரும் வகையிலும் பூசி மொழுகினார்.

    அதிகார பலம்

    அதிகார பலம்

    பணபலம், அதிகார பலத்தை உடைத்தெறிக்கும் வகையில் மக்கள் எழுச்சி உண்டாக வேண்டும். அப்போதுதான் நான் அரசியலுக்கு வருவேன் என கூறிவிட்டார். நான் நிற்கிறேன் என் பின்னால் வாருங்கள் என அழைப்பதற்கு பதிலாக நீங்கள் எல்லாவற்றையும் ரெடி செய்து வையுங்கள், நான் வருகிறேன் என ரேஞ்சில் அவர் சொல்லிவிட்டார்.

    கராத்தே தியாகராஜன்

    கராத்தே தியாகராஜன்

    இதில் முதல்வர் வேட்பாளராக தான் இருக்க மாட்டேன் என்பதையும் கூறிவிட்டார். அந்த பதவிக்கு 50 வயதுக்குள்பட்ட திறமையான இளைஞரை முன்னிறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் யாராக இருப்பர் என்ற விவாதமும் எழுந்துள்ளது. இதுகுறித்து நியூஸ் 18 தமிழ் சேனலுக்கு கராத்தே தியாகராஜன் பேட்டி அளித்தார்.

    1000 சதவீதம்

    1000 சதவீதம்

    அவர் கூறுகையில் நான் முதல்வர் வேட்பாளர் இல்லை, கட்சியின் தலைவராக மட்டுமே இருப்பேன் என ரஜினி கூறியிருந்ததே பெரிய அறிவிப்புதான். மாற்று அரசியலை விரும்புகிறார். தமிழகத்தில் 65 சதவீதம் மட்டுமே வாக்களிக்கின்றனர். மீதமுள்ள 35 சதவீதம் மக்கள் வாக்கே அளிப்பதில்லை. எனக்கு பதவி ஆசையில்லை. எனக்கு தெரிந்து ரஜினி ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கட்டாயம் அரசியல் கட்சியை அவர் தொடங்குவார். தமிழருவி மணியனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க மாட்டார். அவரை அறிவிக்க 1000 சதவீதம் வாய்ப்பே இல்லை. அவர் ராசியில்லாத தலைவர் என கடுமையாக கராத்தே விமர்சித்துள்ளார்.

    English summary
    Karate Thiyagarajan says that Tamilaruvi Manian wont be annnounced as CM candidate. He is unlucky fellow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X