சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காவிரி ஆணையக் கூட்டம்: 19.5 டி.எம்.சி. நீரைத் திறக்க தமிழகம் வலியுறுத்தாதது ஏன்? வைகோ

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்துக்கு 19.5 டி.எம்.சி. நீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தாது ஏன் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கடந்த 15 ஆம் தேதி நான் அறிக்கை விடுத்திருந்தேன். நேற்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூன்றாவது கூட்டம், டில்லியில் மத்திய நீர்வள ஆணைய தலைமை அலுவலகத்தில் நடந்தது. தமிழகத்தின் சார்பாக இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுப்பணித் துறைச் செயலாளர் பிரபாகர் அளித்த பேட்டியில், "காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் குறுவை சாகுபடி, தமிழக விவசாயிகளின் நிலை மற்றும் நீர் பற்றாக்குறை பிரச்சினைகளை தெளிவாக எடுத்துரைத்த பின்னர் காவிரியில் 9.19 டி.எம்.சி. நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது" என்று தெரிவித்து இருக்கிறார்.

காவிரி ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன், கர்நாடகாவிலிருந்து காவிரியில் விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு வெளிவந்த பிறகு நேற்று கர்நாடகா நீர்ப் பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த கோடை மழை இல்லாததாலும், கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதாலும் விவசாயம் மற்றும் குடிநீருக்கு நீர் தேவைப்படுவதாலும் தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் எப்படி திறக்க முடியும்? என்று கூறி இருக்கிறார்.

திமுகவின் ரகசிய மூவ்கள்.. ஆக்டிவ் ஆகும் ஸ்லீப்பர் செல்கள்.. தூக்கமிழக்க போகும் அதிமுக! திமுகவின் ரகசிய மூவ்கள்.. ஆக்டிவ் ஆகும் ஸ்லீப்பர் செல்கள்.. தூக்கமிழக்க போகும் அதிமுக!

கர்நாடகா அமைச்சர் மறுப்பு

கர்நாடகா அமைச்சர் மறுப்பு

மேலும், கர்நாடகா அணைகளுக்கு தண்ணீர் வரத்தை அடிப்படையாகக் கொண்டு, தண்ணீர் திறக்க வேண்டும் என்றுதான் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறவில்லை. தென்மேற்கு பருவமழை தொடங்கும்பொழுது கர்நாடக அணைகளுக்கு எதிர்பார்க்கும் நீர் வரத்து இருந்தால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.

டிசம்பர் முதல் மே வரை கணக்கீடு

டிசம்பர் முதல் மே வரை கணக்கீடு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்று. கர்நாடக அரசு தண்ணீர் திறக்கப்போவதில்லை என்பது இதிலிருந்து உறுதியாகத் தெரிகிறது. கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து மே மாதம் வரையில் தமிழகத்திற்கு 19.5 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட்டிருக்க வேண்டும்.

தமிழகம் வலியுறுத்தவில்லை

தமிழகம் வலியுறுத்தவில்லை

தமிழ்நாட்டுக்குத் திறக்க வேண்டிய நிலுவைத் தண்ணீரை முழுமையாக அளிக்க வேண்டும் என்று காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தாதது ஏன்? கர்நாடக மாநிலம் வழக்கம்போல் அணைகளில் தண்ணீர் இல்லை என்று திரும்பத் திரும்ப பொய் கூறி வருவதை ஏற்க முடியாது.

தமிழக அரசு நடவடிக்கை தேவை

தமிழக அரசு நடவடிக்கை தேவை

மேட்டுர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இந்த ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி குறுவைச் சாகுபடிக்குத் தண்ணீர் திறப்பதற்கு முடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில், குறுவைச் சாகுபடிப் பயிர்களைக் காப்பாற்றவும், குடிநீர் தேவைக்கும் தமிழகத்தின் பங்கான 19.5 டி.எம்.சி. நீரைப் பெறுவதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.

English summary
MDMK General Secreatary Vaiko has demanded that Karnataka should release 19.5 TMC cauvery Water to the Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X