சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புரியாதது போல் நடித்து பெரியாரைப் பற்றிப் பேசி...ரஜினிக்கு கார்த்திகேய சிவசேனாபதி கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக வரலாறு பற்றி புரிந்தும் புரியாதது போல் நடித்துக் கொண்டு பெரியாரைப் பற்றிப் பேசி இருக்கிறீர்கள் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு சமூக ஆர்வலரும் சேனாதிபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிறுவனருமான கார்த்திகேய சிவசேனாபதி கடிதம் அனுப்பியுள்ளார்.

Karthikeya Sivasenapathy writes letter to Actor Rajinikanth on Thanthai Periyar issue

கார்த்திகேய சிவசேனாபதியின் கடிதம்:

அன்புள்ள சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு,

நலம் நாடுவதும் அதுவே !!

சங்ககாலத்தில் சிந்து வெளி நாகரிகத்தில், கீழடியில், ஆதிச்சநல்லூரில், கல்வி பரவலாக்கம், சாமானியனுக்குக் கல்வி,(குயவர்களும் கல்வி கற்று இருந்தனர்) என்பது சான்றோடு வெளிப்படுகின்றது. பெண் தெய்வ வழிபாடு, ஆண் பெண் சம உரிமை, ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமூக கூட்டமைப்பு போன்ற பெரும் பண்பாடுகளின் சான்றாக வாழ்ந்து வந்தனர் தமிழர்கள். சில மன்னர்களின் ஆட்சிக்குப் பின்னர் தமிழரின் நிலை தடுமாறி தடம் மாறியது.

கல்வி , மூடநம்பிக்கை, எனக் கடந்த ஆயிரம் ஆண்டுகள் ஓர் இருண்ட காலமாகவே கடந்து வந்துள்ளனர் தமிழர்கள். அதற்குப் பின் எங்கள் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது, நீதிக்கட்சி, திராவிட கழகம், பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர், MGR , அம்மா ஆகியோரின் ஆட்சிக் காலங்கள். 1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தான் சங்ககால தமிழனின் வாழ்வியல் உயிர் பெற்று, கல்வி சமூக நீதி, போன்றவை ஈரோடு கிழவன் பெரியார் விதைத்த விதையினால் தான் இன்றைய தலைமுறை கல்வியின் பயன்பெற்று வாழ்வின் உயர் நிலைகளை அடைய முடிந்தது.

ஆனால் அன்றும் திரு.ராஜாஜி போல் வலது சாரி சித்தாந்தத்தின் சான்றுகள், பள்ளிகளை மூட, குலக் கல்வி திட்டத்தினை முன்னெடுக்க, அவற்றையெல்லாம் பெரியார் எதிர்த்துப் போராடி, ஐயா காமராஜருக்கு ஆதரவு அளித்து, அவரை முதல்வர் அரியணை ஏற்றி திரு. ராஜாஜி அவர்கள் மூடிய பள்ளிகளைத் திறந்தார். அண்ணாவின் ஆட்சிக்குப் பின் கிராமத்திற்கு ஓர் பள்ளிக்கூடம் எனத் திறந்து எங்களின் பூட்டான், பாட்டன், தாத்தா என அனைவரும் எழுத்தறிவு பெற்று, இழந்த தமிழர் பெருமை மீட்டு எடுத்து , மேற்படிப்பினை தன் வசம் பெற்று மருத்துவர், வழக்கறிஞர், பொறியியல் வல்லுநர்கள், அரசு அதிகாரிகள், IAS , IPS IRS IFS அதிகாரிகள் எனப் பல உயர்நிலைகள் அடைந்து வாழ்ந்து காட்டுகின்றோம்.

இந்த புரிதல் ஏதும் இன்றி, அல்லது புரிந்தும் புரியாதது போல் நடித்துக் கொண்டு பெரியாரைப் பற்றிப் பேசி இருக்கிறீர்கள். உங்கள் ஆன்மீக அரசியல் நாங்கள் அறிந்ததே !! ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரி அன்று, எங்கள் பேரூர் ஆதீனம், கெளமார மடாலயம் குன்றக்குடி அடிகளார் போன்றோரின் காவியை மதிக்கவும் உங்களைப் போன்ற சிலரின் காவியை விரட்டி அடிக்கவும் தெரியும். எந்த காவி எங்களை வர்ணாஷ்ரமம், மனுஸ்ம்ரிதியினால் அடக்கி எங்களின், கல்வி, மொழி கலாச்சாரம் , வாழ்வியல் முறை என அனைத்தையும் அழித்து எங்கள் வாழ்வைச் சீர்குலைக்கும் என்பதையும் நன்கு அறியும் பகுத்தறிவும் கொண்டு உள்ளோம். எந்த காவியின் ஆன்மீகத்தில் உண்மை உள்ளது, எங்களின் மேல் பற்று உண்டு, எங்களிடம் வேறுபாடு பாராட்டாமல், எங்களை அரவணைத்து எங்களின் மொழி, கலாச்சாரத்தை ஏந்தி நிற்கும் என்று வேறுபடுத்தும் பகுத்தறிவைக் கொண்டு உள்ளோம்.

உங்களுக்கான எனது நான்கு கேள்விகள்..

மேலும் படிக்க

English summary
Senaapathy Kangayam Cattle Research Foundation head Karthikeya Sivasenapathy wrote a letter to Actor Rajinikanth on Thanthai Periyar issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X