சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேலூரை தொடர்ந்து சிவகங்கையை அதிர வைக்கப்போகிறதா வருமான வரி சோதனை?- கார்த்தி சிதம்பரம் பரபர ட்வீட்

Google Oneindia Tamil News

சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகள் தனது வீட்டுக்கு ரெய்டு நடத்த வர உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் ட்வீட் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் இல்லங்கள், கல்வி நிறுவனங்களில் வருமான வரி ரெய்டு நடைபெற்ற நிலையில், எனது வீட்டிலும் ரெய்டு நடத்திக் கொள்ளலாம் என ப.சிதம்பரம் வான்டடாக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.

Karti Chidambaram hints Income Tax raids

இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் இன்று வெளியிட்ட ட்வீட்டில், என்னுடைய விருப்பமான விசிட்டர்கள் வீட்டுக்கு வருவதாக கேள்விப்பட்டேன். ஆர்வத்தோடு அவர்களை எதிர்நோக்கி உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Karti Chidambaram hints Income Tax raids

நாளை ஆந்திரா சட்டசபை தேர்தல்.. ஹைதராபாத் பஸ், ரயில் நிலையங்களில் கூட்டமோ, கூட்டம் நாளை ஆந்திரா சட்டசபை தேர்தல்.. ஹைதராபாத் பஸ், ரயில் நிலையங்களில் கூட்டமோ, கூட்டம்

கர்நாடக முதல்வர் குமாரசாமியும் இதேபோன்ற ஒரு ட்வீட்டை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதற்கு மறுநாளே அவரது அமைச்சரவை சகாவிற்கு நெருக்கமானவர்கள் வீடுகள், ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி சிதம்பரத்தின் இந்த ட்வீட், தமிழகத்தில் மற்றொரு ரவுண்ட்டு, வருமான வரித்துறை ரெய்டுகள் நடைபெற உள்ளதா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். பாஜக சார்பில், அதன் பொதுச் செயலாளர் ஹெச்.ராஜா களமிறங்கியுள்ளார். இந்த நிலையில், வேலூரில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டு போல சிவகங்கையையும் அதிர வைக்க கூடிய அளவுக்கு வருமான வரித்துறை ரெய்டுகள் நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

English summary
Heard my favourite visitors are coming home! Will be eagerly awaiting them, says, Karti P Chidambaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X