சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2-வது முறையாக சிவகங்கைக்கு குறிவைக்கும் கார்த்தி சிதம்பரம்- ஒரு பயோடேட்டா!

Google Oneindia Tamil News

Recommended Video

    எச்.ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் போட்டி- வீடியோ

    சென்னை: 2-ஆவது முறையாக சிவகங்கை மக்களவை தொகுதிக்கு கார்த்தி சிதம்பரம் குறிவைத்துள்ளார்.

    சிவகங்கை மக்களவை தொகுதி எம்பி தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் 4-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டதை அடுத்து டெபாசிட் தொகையை இழந்தார்.

    இந்த நிலையில் அவரே மீண்டும் சிவகங்கை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. தந்தையின் தனிக்கட்சியில் பணியாற்றியது முதல் தற்போது எம்பி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது வரை கார்த்தி சிதம்பரம் கடந்து வந்த பாதையை காண்போம்.

    ஒருவழியாக முடிவுக்கு வந்தது சிவகங்கை இழுபறி.. எச் ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டிஒருவழியாக முடிவுக்கு வந்தது சிவகங்கை இழுபறி.. எச் ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி

    சிதம்பரம்

    சிதம்பரம்

    சிவகங்கை மாவட்டத்தில் கண்டனூரில் கார்த்தி சிதம்பரம் 1971-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை ப.சிதம்பரம். காங்கிரஸ் ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக இருந்தார். மகாராஷ்டிரத்தின் மாநிலங்களவை உறுப்பினராக சிதம்பரம் தேர்வு செய்யப்பட்டார்.

    மேற்படிப்பு

    மேற்படிப்பு

    கார்த்தியின் தாய் நளினி சிதம்பரம். இவர் பிரபல வழக்கறிஞர். கார்த்தி சிதம்பரம் எழும்பூரில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் படித்தார். பின்னர் அவர் கேம்பிரிட்ஜ் மற்றும் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பு படித்தார்.

    [முக்கிய வேட்பாளர்களின் களம்.. பெரிய கட்சிகளின் டார்கெட்.. சென்னை மத்திய தொகுதியின் சிறப்பம்சம்!]

    தேர்தல் பொறுப்பாளர்

    தேர்தல் பொறுப்பாளர்

    இவர் தமிழகம் வந்தவுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த ப.சிதம்பரம், காங்கிரஸ் ஜனநாயக பேரவை என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதில் உறுப்பினராக கார்த்தி இருந்தார். மேலும் சிவகங்கையில் ப சிதம்பரத்தின் தேர்தல் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

    தனிதொழில்

    தனிதொழில்

    டென்னிஸ் விளையாட்டில் 30 ஆண்டுகளாக ஈடுபாடு கொண்டவர். இந்திய டென்னிஸ் வீரர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ளார். இந்திய தொழில்துறையில் ஆர்வமிக்க கார்த்தி சிதம்பரம், அ. சி. முத்தையாவின் மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். தற்போது தனியாக தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.

    English summary
    Karti Chidambaram is going to compete in Sivagangai loksabha constituency for the second time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X