• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஹேப்பி 74.. 56 இன்ச்சால் என்ன செஞ்சுர முடியும்.. அப்பாவுக்கு சூப்பர் வாழ்த்து சொன்ன கா.சிதம்பரம்

|
  P.Chidambaram's 74th birthday is being celebrated by his supporters

  சென்னை: 56 இன்ஞ் மார்பை கொண்ட பிரதமர் மோடியால் 74 ஆவது வயது கொண்ட உங்களை ஒன்றும் செய்ய முடியாது என சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்பியுமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

  முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது 74 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படும் வேளையில் அவர் சிறையில் உள்ளதால் குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் மனவேதனையில் உள்ளனர்.

   Karti Chidambaram says that no 56 can stop you who turn to 74

  இந்த நிலையில் பிறந்தநாளின்போது ப.சிதம்பரத்துக்கு அவரது மகன் கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறுகையில், அன்புள்ள அப்பா... இன்று உங்களுக்கு 74ஆவது பிறந்தநாள். 56 இஞ்ச் மார்பளவு கொண்ட மோடியால் உங்களை தடுத்து நிறுத்தவே முடியாது.

  74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்

  பிறந்தநாளன்று பெரிய கொண்டாட்டங்களை நீங்கள் எப்போதும் விரும்பியதில்லை. ஆனால் மற்றவர்கள் சிறிய விஷயங்களை கூட பெரிய சாதனை போல் விழா எடுத்து கொண்டாடுகிறார்கள். இந்த நன்னாளில் நீங்கள் இல்லாதது வருத்தமாக உள்ளது. விரைவில் நீங்கள் வீட்டுக்கு வந்து எங்களுடன் கேக் கட் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.

  74 வயது சாதனையை வெறும் 100 நாட்கள் சாதனையோடு (மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாட்கள்) ஒப்பிடவே முடியாது. உங்களை பார்க்க நான் ஆவலாக உள்ளேன். உங்களுடைய மனநிலை முன்பைவிட இப்போது உறுதியாக இருக்கும் என நம்புகிறேன். செய்தித்தாள்களை வாசிக்கவும் குறிப்பிட்ட நேரம் டிவி பார்க்கவும் உங்களை அனுமதிப்பதை அறிந்தேன்.

   Karti Chidambaram says that no 56 can stop you who turn to 74

  கடந்த வாரம் சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்த லேண்டர் தரையிறங்கும் தருணம் நடந்தது. இந்த அற்புத தருணத்தை லைவாக பார்க்க நீங்கள் ஆசைப்பட்டிருந்தீர்கள். பெருமிதத்துடன் இந்த நிகழ்வை நாம் நேரடியாக பார்க்க அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது. அங்கு நடந்த ஒரு டிராமாவை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

  கன்னியாகுமரியைச் சேர்ந்த தமிழரும் இஸ்ரோ தலைவருமான கே சிவன் லேண்டருடனான தொடர்பை இஸ்ரோ இழந்தவுடன் மிகவும் வருத்தப்பட்டார். அப்போது பிரதமர் மோடி அவரை கட்டித் தழுவி ஆறுதல் கூறுவது போல் ஒரு நாடகத்தை நிகழ்த்தினார். அறிவியல் துறையில் எந்த வித புரிதலும் இல்லாமல் ஆயிரமாண்டுகளுக்கு முன்பு ஏதோ நிகழ்ந்தது இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனைகளை பேசியுள்ளார்.

  புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்தவர் நியூட்டன் என்பது தெரியும். ஆனால் அமைச்சர் பியூஷ் கோயலை பொருத்தவரை அதை கண்டறிந்தது ஐன்ஸ்டின். 100 நாட்கள் கொண்டாட்டத்தின் போது பிரகாஷ் ஜாவடேகரின் செய்தியாளர்கள் சந்திப்பை நீங்கள் காணத் தவறிவிட்டீர்கள் அப்பா. 6 ஆண்டுகளில் ஜிடிபி 5 சதவீதம் இருப்பதை எத்தனை அழகாக கொண்டாடினார்கள் தெரியுமா.

  ஆட்டோமொபைல் துறையில் பெரும் சரிவை சந்தித்துவிட்டனர். ஓலா, ஊபரை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தியதால்தான் வாகன விற்பனை குறைந்துள்ளது என நிர்மலா சீதாராமனின் மதிநுட்பத்தினால் கண்டறிந்து கூறியுள்ளார். நாங்களாவது உங்களை சிறையில் வந்து பார்க்கிறோம். உங்கள் சார்பாக பொதுமக்களுக்கு கருத்துகளை டுவிட்டர் மூலம் தெரிவித்து வருகிறோம்.

  காஷ்மீரில் உள்ள எம்பிக்களை பார்க்க செல்லும் சக எம்பிக்கள் செய்தியாளர்களை சந்திக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அண்மையில் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சொல்ல போனால் பாஜக அரசோ எதிலும் வெற்றி பெறாத நிலையில் தனது இரண்டாவது முறை ஆட்சியை கொண்டாடி வருகிறது என்று கூறியுள்ளார். இதில் காஷ்மீர் பிரச்சினை, ரபேல் வடால் வெற்றி உள்ளிட்ட விவகாரங்களை குறிப்பிட்டுள்ள கார்த்தி, நீங்கள் விரைவில் வெளியே வருவீர்கள் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

  பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Karti Chidambaram says in his letter to P. Chidambaram that no 56 can stop you who turn to 74.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more