சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தவறான விவரம் தந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியும்.. சொத்துக்கள் குறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ப.சிதம்பரத்திற்கு 5 நாள் காவல்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    சென்னை: சில ஊடகங்களில் எனது சொத்துகள் சட்டத்திற்கு புறம்பாக வாங்கப்பட்டதாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால் அதில் துளியும் உண்மையில்லை என கார்த்தி சிதம்பரம் எம்பி விளக்கம் அளித்துள்ளார்

    இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை தொகுதி எம்பியுமான கார்த்தி சிதம்பரம் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அவர் தனது அறிக்கையில், "சில ஊடகங்கள் கடந்த சில நாள்களாக எனது சொத்துக்கள் சட்டத்துக்கு புறம்பாக வாங்கப்பட்டதாக தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றன, இவற்றை விசாரணை அமைப்புகளிடம் இருந்து வாங்கினார்களா அல்லது அவற்றுக்கு என்ன ஆதாரம் உள்ளது. விளம்பரத்துக்காக இந்த வேலைகளை செய்கிறார்கள்.

    karti p chidambaram mp clarified his assets details

    நான் இரண்டு முறை எம்பியாக எம்பி பதவிக்கு போட்டியிட்டேன். அதில் ஒருமுறை வெற்றி பெற்றேன். தேர்தலில் போட்டியிடும் போது சொத்து பற்றி தவறான விவரம் தந்திருந்தால் என்னை எம்.பி பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்ய முடியும். சொத்துக்கள் அனைத்தும் சட்டப்படி வாங்கியவை. நான் எம்.பி பதவிக்கு வேட்பாளராக இருந்தபோது என்னுடைய அனைத்து சொத்து விவரங்களையும் சரியாக தந்து உள்ளேன்.

    வெளிநாடுகளில் உள்ள எனது சொத்துகள் சட்டப்பூர்வமான முறையில் வாங்கப்பட்டவை. சட்டத்திற்கு புறம்பாக வாங்கியிருந்தால் வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் என் மீது நடவடிக்கை எடுக்க முடியும். எனவே ஊடகங்கள் உண்மை நிலை அறிந்து வெளியிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    English summary
    p chidambaram's son karti p chidambaram mp clarified his assets details, he relased statement on twitter
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X