சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருணாநிதி 2ஆம் ஆண்டு நினைவு தினம் : ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி - நலத்திட்ட உதவிகள் வழங்கினர்

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் இரண்டாம் அண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்பி உள்ளிட்ட பலரும் மவுனமாக வந்து மெரீனாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மெரீனா கடற்கரையில் சிறிது தூரம் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் கனிமொழி, துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

கொரோனா லாக்டவுன் கால தடை உத்தரவு இருப்பதால் மெரீனா கடற்கரையில் சிறிது தூரம் மவுனமாக கையில் பதாகைகளை ஏந்தி ஊர்வலம் வந்தனர். முதலில் அண்ணா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்திய ஸ்டாலின், பின்னர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Karunanidhi 2nd Anniversary: Stalin, Kanimozhi Tribute Provided welfare assistance

அவரைத்தொடர்ந்து கனிமொழி, துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் ஆகிய பலரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கொரோனா முன்கள பணியாளர்கள் பலருக்கும் நலத்திட்ட உதவிகளை ஸ்டாலின் வழங்கினார். கடந்த ஆண்டு நீண்ட தூரம் மவுன ஊர்வலமாக வந்து கருணாநிதி நினைவிடத்திற்கு வந்து திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். இந்த ஆண்டு ஸ்டாலின் தலைமையில் குறைந்த அளவிலான நிர்வாகிகள் மட்டுமே வந்து அஞ்சலி செலுத்தினர்.

Karunanidhi 2nd Anniversary: Stalin, Kanimozhi Tribute Provided welfare assistance

கருணாநிதியின் இரண்டாம் நினைவு தினத்தை முன்னிட்டு சர்வதேச இணையவழி மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் இப்போட்டியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் 12 மணி அளவில் தொடங்கிவைத்தார். இன்று ஆகஸ்ட் 7 முதல் 31ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு இந்த மாரத்தானில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியுடன் திடீரென தொலைப்பேசியில் பேசிய முக ஸ்டாலின்! இதுதான் காரணம்! பிரதமர் மோடியுடன் திடீரென தொலைப்பேசியில் பேசிய முக ஸ்டாலின்! இதுதான் காரணம்!

English summary
Today marks the second anniversary of former DMK leader Karunanidhi. Many, including DMK leader Stalin and Kanimozhi MP, came in silence and paid their respects at the Karunanidhi memorial in Marina. Stalin also provided welfare assistance to Corona frontline workers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X