சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தல்.. திமுக விடாது.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் ஆவேசம்

Google Oneindia Tamil News

சென்னை: ஒரே நாடு, ஒரே ஜாதி என்று சட்டம் கொண்டுவர, மத்திய அரசு தயாரா என்று, திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பினார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை இன்று திறக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஓராண்டு நினைவு தின கூட்டம் நடைபெற்றது.

Karunanidhi is most wanted in current political situation: DMK Stalin

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், தொண்டர்கள், திமுக உறுப்பினர்கள் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது: தமிழக வரலாற்றில், திராவிட முன்னேற்ற கழக வரலாற்றில், ஏன் என்னுடைய தனிப்பட்ட வரலாற்றில் மறக்க முடியாத நாள் ஆகஸ்ட் 7. நாம் உயிர் என்று உடலுக்குள் பொத்தி பாதுகாத்து வைத்திருந்தோம். அந்த உயிரினும் மேலான தலைவர் நம்மிடம் இருந்து விலகி அவருடைய அண்ணனுக்கு பக்கத்தில் ஓய்வெடுக்க சென்ற நாள் இது.

ராபின்சன் பூங்காவில் 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது. சரியாக 20 ஆண்டுகளில், அதாவது 1969ம் ஆண்டு, அறிஞர் அண்ணா அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தார். சாமானியர்களுக்கான இயக்கத்தை தொடங்கி சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கும் அழைத்துச் சென்றது மட்டுமல்ல, இந்த ஆட்சி இன்றைக்கு இருக்கிறது என்று சொன்னால், ஐந்து முறை தமிழகத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் ஆட்சி பொறுப்பில் இருந்தது.

ஒரே நாடு, ஒரே ஜாதி என்று சட்டம் கொண்டுவாங்க.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வீரமணி ஆவேசம் ஒரே நாடு, ஒரே ஜாதி என்று சட்டம் கொண்டுவாங்க.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வீரமணி ஆவேசம்

இந்த இயக்கத்தை 50 ஆண்டுகள் வளர்த்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்.

கோபாலபுரம் வீட்டைடில், எங்களை போன்றவர்கள் கருணாநிதியிடம் சென்று என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்போம். அண்ணா என்ற எழுதினார். பேசச் சொன்னால் அண்ணா என்று உச்சரித்தார். அண்ணா என்றுதான் அவருடைய மூச்சுக்காற்று இருந்தது. அறிவாலயம் என்றால் அவர் கண்கள் விரிந்தது. எத்தகைய தலைவரை நாம் பெற்றுள்ளோம். நான் கம்பீரமாக சொல்கிறேன். இந்தியாவில் எந்த இயக்கத்திற்கும் இப்படி ஒரு தலைவர் இல்லை என்கிற பெருமையை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உருவாக்கிக் கொடுத்தவர் நம்முடைய கலைஞர்.

மற்ற இடங்களில் எல்லாம் எழுந்து நின்று கர்ஜிக்கும் சிலையை பார்த்திருப்பீர்கள். ஆனால் முரசொலி அலுவலகத்தில், உட்கார்ந்து எழுதிக் கொண்டிருப்பார். அட்டை வைத்து எழுதுவதுதான் அவருக்கு மிக மிக பிடிக்கும். அதுதான் தமிழுக்கும் பிடிக்கும் என்பதால் அதே வடிவில் காட்சி தருகிறார். உயிர்ப்போடு வடிவமைத்த சிற்பி தீனதயாளன் அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன்.

பெரியார் என்றால் பகுத்தறிவும், சுயமரியாதையும். அண்ணா என்றால் மொழி மற்றும் இன உணர்வு. கலைஞர் என்றால் சமூக நீதியும், மாநில சுயாட்சியும். இந்த தத்துவத்தை தான் நாடு இன்றைக்கும் பார்த்துக் கொண்டிருக்கிறது. சமூகநீதிக்கும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய காலம் உருவாகி இருக்கிறது. எனவே தான் முன்பைவிட கலைஞர் நமக்கு இன்னும் அதிகம் தேவைப்படுகிறார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பொருளாதார அடிப்படையில், இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளனர். இட ஒதுக்கீடு கொள்கையால், தகுதி, திறமை போய்விட்டதே என்று இதுவரை சொல்லி வந்தவர்கள், இன்றைக்கு அவர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டதும், இட ஒதுக்கீடு கொள்கையை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

அதே போல தான் மாநில சுயாட்சிக் கொள்கையை அழித்துவிட்டு, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே அடையாள அட்டை, ஒரே தேர்வு என கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் டெல்லியில் குவிக்கிறார்கள். மத்திய அரசு என்பது என்று மத்தியப்படுத்தப்பட்ட அரசாக மாறிக்கொண்டிருக்கிறது. இதனால் 1971 ஆம் ஆண்டே, மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று முழங்கினார் கருணாநிதி. அந்த துணிச்சலை நாம் இப்போது எடுத்துக் கொள்ள வேண்டும்.

திமுக லட்சியங்களுக்கு, தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக்கு எதிராக திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தினமும் போராடி வருகிறார்கள். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை விலக்கி கொள்ள கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு. இதற்காக எங்களுக்கு தேச பக்தி பாடத்தை யாரும் கற்றுத் தர தேவையில்லை.
மத்திய அரசை உறுதியாக திமுக எதிர்க்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு காஷ்மீரில் அமையும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்பதே திமுக நிலைப்பாடு. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

English summary
Karunanidhi is most wanted in current political situation, says DMK president DMK Stalin in karunanidhi statue opening function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X