சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கட்சியை காப்பாற்ற 1980களில் கருணாநிதி.. 2019ல் எடப்பாடி.. எடுத்த ராஜதந்திரங்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    அன்று கட்சிக்காக கருணாநிதி எடுத்த ராஜதந்திரம்.. இன்று ஆட்சிக்காக எடப்பாடி!- வீடியோ

    சென்னை: 1980ல் கருணாநிதி தனது திராவிட முன்னேற்ற கழகத்தை காப்பாற்ற. அன்றைய பிரதமர் இந்திராகாந்தியுடன் கூட்டணி வைத்தார். இப்போது அதேபோல் தான் இன்றைய பிரதமர் மோடியுடன் கூட்டணி வைத்துள்ளார் எடப்பாடி. மறைந்த முதல்வர் கருணாநிதி கட்சியை காப்பாற்றினார். இன்றைய முதல்வர் எடப்பாடி ஆட்சியை காப்பாற்றி உள்ளார்.

    இது என்ன புதுக்கதை என்கிறீர்களா, இல்லை, இது கதையல்ல நிஜம். கடந்த 1976களில் அன்றைக்கு காங்கிரஸ் கட்சி மற்றும் பிரதமர் இந்திரா காந்தியை எதிர்த்து கடுமையான போராட்டங்களை மறைந்த முதல்வர் கருணாநிதி தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் முன்னெடுத்தது.

    அப்போது எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலகி, அதிமுக என்ற இயக்கத்தை ஆரம்பித்து 1977இல் ஆட்சியை பிடித்து முதல்வரானார். முன்னதாக 1975களில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி காங்கிரஸ் கடுமையான நெருக்குதல்களை கொடுத்து பிரச்னை செய்து வந்தது.இன்னொரு பக்கம் எம்ஜிஆர் மிகப்பெரிய அளவில் வளர்ந்து திராவிட முன்னேற்ற கழகத்தை கரைத்து வந்தார்.

     கருணாநிதி ராஜதந்திரம்

    கருணாநிதி ராஜதந்திரம்

    இதனால் சமார்த்தியமாக செயல்பட்ட கருணாநிதி கட்சியை காப்பாற்றுவதற்காக 1976களில் இந்திராவை எதிர்த்த கருணாநிதி, 1980களில் இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தார். இந்த கூட்டணி மிகப்பெரிய அளவில் எம்ஜிஆர் ஆட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தது. இதனால் அன்றைக்கு கருணாநிதி ராஜதந்திரத்துடன் செயல்பட்டதால் 1980களில் பாராளுமன்றத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் வென்றது. எம்ஜிஆரின் அதிமுக 2 இடங்களில் மட்டுமே வென்றது.

     எடப்பாடி ராஜதந்திரம்

    எடப்பாடி ராஜதந்திரம்

    இந்நிலையில் அதிமுகவை காப்பாற்றி ஆழமரமாக வளர்த்த ஜெயலலிதா மறைந்ததால், அதிமுக அதிர்ச்சியில் இருந்தது. அந்த சமயத்தில் சசிகலா குடும்பத்துக்கு எதிரான ஒபிஎஸ்சின் தர்ம யுத்தம், ஒபிஎஸ்க்கு எதிரான டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக பிரிவு உள்ளிட்ட காரணங்களால் அதிமுக பலவீமான நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற எடப்பாடி, மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசுடன் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் கூட்டணி வைத்தார்.

     எடப்பாடி தோல்வி

    எடப்பாடி தோல்வி

    ஆனால் கருணாநிதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன் கூட்டணி வைத்து 37 இடங்களை வென்றதுபோல் வெற்றிபெறவில்லை. மாறாக எடப்பாடி பிரதமர் மோடியுடன் கூட்டணி வைத்து 37 இடங்களில் தோற்றுபோனார். ஆனால் இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்று எடப்பாடி ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளார்.

     ஆட்சியை காப்பாற்றிய எடப்பாடி

    ஆட்சியை காப்பாற்றிய எடப்பாடி

    இதன் சொல்லவருது ஒரே விஷயம்தான் 1980களில் கருணாநிதி கட்சியை காப்பாற்றியதற்காக மத்தியில் இந்திரா காந்தியுடன் கூட்டணி வைத்தார். அதன்படி அவர் கட்சியை காப்பாற்றி விட்டார். இப்போது 2019 இல் கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றுவதற்கான போராட்டத்திற்காக எடப்பாடி மோடியுடன் கூட்டணி வைத்தார். இதில் ஆட்சியை காப்பாற்றி விட்டார். ஆனால் கட்சியை காப்பாற்ற தவறிவிட்டார். இந்த தேர்தலில் மிகப்பெரிய அளவில் வாக்குவங்கியை அதிமுக இழந்துள்ளதே எதார்த்தம்.

    English summary
    EX CM and The late DMK leader karunanidhi secure his party after alliance with indira gandhi, TN CM eps secure his rule after alliance with pm modi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X