சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் பலத்த பாதுகாப்பு.. கருணாநிதி சிலை திறப்பு விழாவால் செம அலர்ட்

கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சியில், சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு, தலைவர்கள் பங்கேற்பு!

    சென்னை: சென்னையில் இன்று நடைபெறும் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சியில், சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதால், பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதிதாக அண்ணா, கருணாநிதியின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு சிலைகளை திறக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து, ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் மாலையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    Karunanidhi statue Ceremony: Police Security has been strengthened in Chennai

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சென்னைக்கு வருகின்றனர்.

    இதனையொட்டி, சென்னை விமானநிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையின் பிறபகுதியிலும் போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது.

    சிலை திறப்பு விழா முடிந்த பின் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று சோனியா அஞ்சலி செலுத்த உள்ளார். தலைவர்கள் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    English summary
    Security has been strengthened due to the presence of important political party leaders including Sonia Gandhi for the opening ceremony of the Karunanidhi statue in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X