சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.. திமுக குஷி

கலைஞர் கருணாநிதியின் சிலையை இன்று திறந்து வைக்கிறர் துணை குடியரசு தலைவர்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சிலையைக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று திறந்து வைத்தார்.

Recommended Video

    சென்னை: கம்பீரமாய் நிற்கும் கலைஞர் சிலை... குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைப்பு!

    தமிழக சட்டப்பேரவையில் ஏப்ரல் 26ம் தேதி 110 விதியின் கீழ் உரையாற்றிய முதல்வர் முக ஸ்டாலின் இது தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

    அப்போது, "நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் உண்டென்றால் அது கருணாநிதி மட்டும்தான்.. மொத்தம் 5 முறை முதல்வராக இருந்து, 19 வருடங்கள் முதல்வராக பதவி இருந்தவர் கருணாநிதி...

    கதற விடும் கொரோனா.. உலகம் முழுதும் இதுவரை 6,309,337 பேர் பலி.. 530,776,205 பேருக்கு பாதிப்புகதற விடும் கொரோனா.. உலகம் முழுதும் இதுவரை 6,309,337 பேர் பலி.. 530,776,205 பேருக்கு பாதிப்பு

    அறிவாலயம்

    அறிவாலயம்

    13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து 60 வருடங்கள் மாமன்றத்தில் இருந்தவர் கருணாநிதி.. அவரது பிறந்த நாளான ஜுன் 3, அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதிக்கு தனியாக சிலை அமைக்கப்படும்" என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார்.. அதன்படி சுமார் 1.56 கோடி செலவில் சிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.. அண்ணா அறிவாலயத்தில் உள்ளது போலவே, இந்த சிலையும் அச்சுஅசலாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

    மீஞ்சூரில் சிலை

    மீஞ்சூரில் சிலை

    16 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டு உள்ளது... இந்த சிலைக்கான பீடம் 12 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது.. மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் சிற்பி தீனதயாளன் என்பவர்தான் இந்த சிலையை வடிவமைத்துள்ளார். சிலையை சுற்றி மெழுகுப்பூச்சுடன் கூடிய கருங்கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன... சிலைக்கு அஞ்சலி செலுத்த வருவோர் நடந்து செல்ல, கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.

    கருணாநிதி சிலை

    கருணாநிதி சிலை

    ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டுள்ளது.. இந்த சிலையைக் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு மாலை 5:30 மணியளவில் திறந்து வைத்தார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், திமுக தலைவர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

    கூட்டணி கட்சிகள்

    கூட்டணி கட்சிகள்

    நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதைத்தவிர, விழாவில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட திமுகவின் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

    அண்ணாசாலை

    அண்ணாசாலை

    விழாவையொட்டி அண்ணா சாலை மற்றும் கலைவாணர் அரங்கத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன... தமிழக அரசு சார்பில் முதல்முறையாக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை எழுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, 1975-ம் ஆண்டிற்கு பிறகு 2022-ல் சென்னை அண்ணா சாலையில் மறுபடியும் கருணாநிதி சிலை அமைக்கப்பட உள்ளது இன்றைய நிகழ்வில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    English summary
    Karunanidhi statue open today at Chennai Omanthurai estate today by Venkaiah naidu கலைஞர் கருணாநிதியின் சிலையை இன்று திறந்து வைக்கிறர் துணை குடியரசு தலைவர்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X