சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றிய முதல் முதல்வர் கருணாநிதி.. போராடி பெற்ற உரிமை!

Google Oneindia Tamil News

Recommended Video

    Flashback: Karunanidhi : முதல்வர்களுக்கு உரிமையை பெற்றுக்கொடுத்த கருணாநிதி- வீடியோ

    சென்னை: சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை அந்தந்த மாநில முதல்வர்களே ஏற்ற வேண்டும் என்று போராடி உரிமையையும் பெற்றவர் கருணாநிதி.

    தமிழக முதல்வராக ஐந்து முறை இருந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினங்களில், ஆளுநர்கள்தான் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி வந்தனர்.

    இதை மாற்றி குடியரசு தினத்தில் ஆளுநர்களும், சுதந்திர தினத்தில் மாநில முதல்வர்களும் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கருணாநிதி போராடினார்.

    அனுமதி

    அனுமதி

    அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினார். இதற்கு இந்திரா காந்தியும் அனுமதி அளித்தார்.

    ஆகஸ்ட் 15

    ஆகஸ்ட் 15

    அதன்படி, அனுமதி கிடைத்து, 1974 ஆகஸ்ட் 15ம் தேதி அவர் தேசியக் கொடியை ஏற்றினார். இதன் மூலம் சுதந்திர தினத்தில் கொடியேற்றிய நாட்டிலேயே முதல் முதல்வர் என்ற பெருமையை கருணாநிதி பெற்றார்.

    உரிமைகளை எண்ணிய

    உரிமைகளை எண்ணிய

    இத்தகைய உரிமைகளை போராடி பெற்ற கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி இயற்கை எய்தினார். அப்போது அவரது உடல் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்ததை கண்ட மற்ற மாநில முதல்வர்கள், கருணாநிதி தங்களுக்கு பெற்று தந்த உரிமையை எண்ணி நெகிழ்ந்தனர்.

    அமைதி ஊர்வலம்

    அமைதி ஊர்வலம்

    இன்றைய தினம் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்படுகிறது. இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் சென்னையில் நடைபெறுகிறது.

    English summary
    Flashback: Karunanidhi was the first CM hoist National Flag in Independence day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X