சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தல் புலியின் வீட்டுக்குள் புகுந்த கருணாநிதி.. சூரியனுக்கே உங்க ஓட்டு.. ஷாக் ஆன பரிசுத்த நாடார்

1962-ல் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் தஞ்சையில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் சிறப்பம்சம்

Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதி- பரிசுத்த நாடாரின் நட்பு பாராட்டிய அரசியல் நாகரீகம்- வீடியோ

    சென்னை: "நான் வாயை தொறந்தால் ஒரு மாசம் அவர் தூங்க மாட்டார்" என்று ஒரு வேட்பாளரும், "பிஞ்சிலே பழுத்த கதையை வெளியில் எடுத்து விடட்டுமா" என்று மற்றொரு வேட்பாளரும் மாறி மாறி பேசி வருவதுதான் இன்றைய பிரச்சாரம் என்று ஆகிவிட்டது!

    ஆனால் அன்றைய தேர்தல் காலத்தில் ஒரு கண்ணியம் இருந்தது... நாகரீகம் இருந்தது... இளவயது வேட்பாளர்கள் என்றாலும் ஒருவருக்கொருவர் பரஸ்பர நட்பு காணப்பட்டது! அதற்கு ஒரு உதாரணம்தான் இது!

    Karunanidhis election campaign

    1962-ம் ஆண்டு! மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தஞ்சாவூரில் போட்டியிட போகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடார் நிற்கிறார்!

    பிரச்சாரத்திற்காக தஞ்சாவூர் சென்ற கருணாநிதி, முதல் வேலையாக எங்கு போனார் தெரியுமா? கட்சி ஆபீசுக்கோ, நிர்வாகிகளை சந்திக்கவோ இல்லை.. நேராக எதிர் வேட்பாளர், தேர்தல் புலி என சொல்லப்பட்ட பரிசுத்த நாடார் வீட்டுக்கே சென்றுவிட்டார்.

    திடீரென்று வீட்டுக்குள் வந்த கருணாநிதியை பார்த்ததும் பரிசுத்த நாடாருக்கு ஒரு பக்கம் இன்ப அதிர்ச்சி இருந்தாலும், நட்புடன் வரவேற்றார். இதுதான் பரிசுத்த நாடாரின் பெருந்தன்மை!

    வீட்டுக்குள் போன கருணாநிதியோ, "உதயசூரியன் சின்னத்தில் நீங்க எனக்கு ஓட்டு போடணும்" என்று கேட்டிருக்கிறார். இதுதான் கருணாநிதியின் தில்!

    என்ன கிழவி.. சவுக்கியமா.. மச்சான்தான் இங்க நிக்கறாரு.. மறக்காம ஓட்டு போட்டுடு.. அதெல்லாம் ஒரு காலம்! என்ன கிழவி.. சவுக்கியமா.. மச்சான்தான் இங்க நிக்கறாரு.. மறக்காம ஓட்டு போட்டுடு.. அதெல்லாம் ஒரு காலம்!

    ஆனால் கருணாநிதி இப்படி கேட்டதும் ஒரு செகண்ட் ஷாக் ஆன பரிசுத்த நாடார், "எங்கள் சின்னமான இரட்டை காளை-க்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டதாக சொல்கிறார்கள்" என்றார். கடைசியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பரிசுத்த நாடார் தோல்வியை தழுவியது வேறு விஷயம். ஆனால் இப்படி ஒரு நாகரீக சம்பவம் இனிமேல் சத்தியமாக நடக்கவே நடக்காது!

    English summary
    In 1962 Karunanidh went to the house of the Opposite Candidate Parisutha Nadar and asked him to vote for DMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X