சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த கருணாஸை புரிஞ்சுக்கவே முடியலையே.. கேள்வியும் கேட்கிறார்.. ஆதரவாவும் பேசுகிறார்..!

கருணாஸ் 2 சீட்களை கேட்டு வருகிறார்

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு பக்கம் அதிமுக அரசை கேள்வி கேட்கிறார்.. மற்றொரு பக்கம் அதிமுக கூட்டணியிலேயேதான் இருக்கோம் என்கிறார் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ்.. ஆக மொத்தம் சூப்பராக குழப்புகிறார்!

பாமகவுக்கு இடஒதுக்கீடு தந்தால், தங்கள் சமூகத்துக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கருணாஸ் ஏற்கனவே கேட்டிருந்தார்..

மேலும், வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கினால், மதுரை ஏர்போர்ட்டிற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்றும் இன்னொரு கோரிக்கையை முன்வைத்திருந்தார். ஆனால், இந்த 2 கோரிக்கையையும் அதிமுக தரப்பில் உடனடியாக நிறைவேற்ற சாத்தியம் இல்லை.

 திருப்பத்தூர்

திருப்பத்தூர்

இந்நிலையில், திருப்பத்தூரில் பேசிய கருணாஸ், சீர்மரபினரை, பழங்குடியினராக அறிவிக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று, ஜாதி வாரி கணக்கெடுப்பை டிசம்பர் 31 க்குள் முடிக்க உத்தரவிட்டது... ஆனால், மாநில அரசு இதுவரை மவுனம் காக்கிறது...

பாமக

பாமக

இந்த கணக்கெடுப்பு நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் சொல்கிறார்.. அவர் அதற்கான காரணத்தை விளக்க வேண்டும்.. ஏனென்றால், இடஒதுக்கீடு அனைவருக்குமானது... அதை மக்கள் தொகை அடிப்படையில் தான் வழங்கவேண்டும். நாங்கள் எப்போதும் அதிமுகவுடன்தான் கூட்டணி.. 2 சீட் கேட்டுள்ளோம்" என்றார்.

 கருணாஸ்

கருணாஸ்


2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் கருணாஸிடம், "எடப்பாடி பழனிசாமி சசிகலாவால் உருவாக்கப்பட்டவரா? எம்எல்ஏக்களால் உருவாக்கப்பட்டவரா" என்று கேட்டனர்.. அதற்கு கருணாஸ் நேரடியாக எந்த பதிலையும் சொல்லாமல், "அதை நான் சொல்லக்கூடிய நேரம் வரும்போது நிச்சயமாக சொல்வேன்..." என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்துவிட்டு சென்றிருந்தார்,

அதிமுக

அதிமுக

இதைதொடர்ந்து, இடஒதுக்கீடு, ஏர்போர்ட்டுக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர், சாதி வாரி கணக்கெடுப்பு, 2 சீட் தேவை, என அடுத்தடுத்த கோரிக்கைகளை அதிமுக தரப்பில் வீசி உள்ளார்.. அதேசமயம் இந்த ஒவ்வொரு கோரிக்கையையும் வைத்துவிட்டு, நாங்கள் அதிமுக கூட்டணயில்தான் இருக்கிறோம் என்றும் அறுதியிட்டு சொல்கிறார்.

நெருக்கடி

நெருக்கடி

இதை வைத்துப் பார்க்கும்போது ஆட்சிக்கு ஆதரவாகவும், பாமக நெருக்கடி கொடுத்தால் அதிலிருந்து முதல்வரையும், அதிமுகவையும் காக்கும் வகையிலேயே தனது சமுதாயத்தை கையில் எடுத்து ஒரு கேடயம் போலவும் கருணாஸ் பயன்படுத்த முனைவதாக தெரிகிறது. பாமகவுக்கு வைக்கப்படும் செக் கருணாஸ்தான் என்பதும் புலனாகிறது.. இதுவும் கூட ஒரு வகையில் அரசியல் உத்திதான் என்றும் கருதலாம். ஆனால் எத்தனை நாட்களுக்கு இது நீடிக்கும் என்றுதான் தெரியவில்லை.

English summary
Karunas says about PMK and Admk
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X