சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக கூட்டணியில்தான் இருக்கோம்.. சசிகலாவை சந்திக்க அழைப்பு வரும்.. நிச்சயம் சந்திப்பேன்.. கருணாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவை சந்திக்க எங்களுக்கு அழைப்பு வரும். நாங்கள் நிச்சயம் மரியாதை நிமித்தமாக சந்திப்பேன் என முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் திருவாடாணை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    AIADMKவுடன் தான் கூட்டணி , Sasikala-வையும் சந்திப்பேன்-Karunas MLA | Oneindia Tamil

    இதுகுறித்து கருணாஸ் எம்எல்ஏ கூறுகையில் முக்குலத்தோர் புலிப்படையின் சார்பாக தேசிய தெய்வீக பரப்புரை என்கிற நிலையில் முக்குலத்தோர் சமுதாயத்தினுடைய நீண்ட நாள் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தும் விதமாக இன்று கோவையில் நாங்கள் நிர்வாகிகளை சந்தித்தோம்.

    ஜெயலலிதா 1994 இல் நந்தனத்தில் தேவர் சிலையை திறந்த வைத்தார். அப்போது கள்ளர், மறவர், அகமுடையோர் ஆகியோரை தேவர் இனம் என வெளியிட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் பிரதான கோரிக்கையாகும்.

    அவர் அவர் "உள்ளே" இவர் "வெளியே".. வியக்கும் வியூகம்.. சூப்பராக டீல் செய்யும் ஸ்டாலின்.. பூரிப்பில் திமுக

    ஜாதி ரீதியிலான கோரிக்கை

    ஜாதி ரீதியிலான கோரிக்கை

    26 ஆண்டுகளாக இந்த கோரிக்கையை நிறைவேற்றாமல் இருக்கும் அதிமுக அரசு உடனடியாக இதில் தனிக்கவனம் செலுத்தி எங்கள் கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்ற வேண்டும். 68 சீர்மரபினர்களுக்கான ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பை எடுக்கச் சொல்லி மத்திய அரசு உத்தரவிட்டு அதற்கான செலவுகளை மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும் என அறிவித்திருந்தது.

    மத்திய மாநில அரசுகள்

    மத்திய மாநில அரசுகள்

    ஆனால் இன்று வரை ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பும் நடத்தப்படாமல் உள்ளது. அந்த கணக்கெடுப்பில் அந்த சீர்மரபினருக்கு மத்திய மாநில அரசின் ஒற்றை சான்றிதழ் வழங்க வேண்டும். மேலும் அந்த 68 சீர்மரபினரையும் பழங்குடியின பட்டியலில் சேர்த்து மத்திய, மாநில அரசுகள் ஒரே சான்றிதழை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.

    ஆலோசிக்க வேண்டும்

    ஆலோசிக்க வேண்டும்

    இந்த சீர்மரபினர் பட்டியலில் இருக்கக் கூடியவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கக் கூடிய காரணத்தினால் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பை நடத்திவிட்டு இடஒதுக்கீடு குறித்து மத்திய மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும்.

    ஒதுக்கீடு

    ஒதுக்கீடு

    இதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இல்லாமல் பிறப்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கக் கூடிய 180 -க்கும் மேற்பட்ட சமுதாய மக்கள் நீண்ட காலமாக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறார்கள். குறிப்பாக வடமாவட்டங்கள், தென்மாவட்டங்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கக் கூடிய அகமுடைய முதலியார்கள், துளுவ வேளாளர், செங்குந்த முதலியார்கள், தொண்டைமான் வெள்ளையா முதலியார்கள், நாயுடுகள், செட்டியார்கள், யாதவர்கள், நாடார்கள் ஆகியோர் வாழ்வு மேம்பட இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    கல்வி

    கல்வி

    குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் வேலைவாய்ப்பு, கல்வியில் இடஒதுக்கீடு என கொடுப்பது ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் ஒட்டுமொத்த எங்களை போன்ற சமூக மக்களை அழிப்பதற்கு சமமானது. ஆகவே முதல்வர் இதில் கூடுதல் கவனம் செலுத்தி எங்கள் கோரிக்கைகளை ஏற்க வேண்டும். ஜெயலலிதா வெளியிட்ட அரசாணையை நடைமுறைப்படுத்தி 25 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

    சசிகலாவிடம் இருந்து அழைப்பு

    சசிகலாவிடம் இருந்து அழைப்பு

    சசிகலா மருத்துவமனையில் இருக்கிறார். மருத்துவமனையிலிருந்து வந்தவுடன் அவர் ஓய்வு எடுப்பார். முதலில் உறவினர்கள் எல்லாம் அவரை சந்திப்பார்கள். எங்களுக்கும் அழைப்பு வரும். நிச்சயமாக அவரை மரியாதை நிமித்தமாக சென்று பார்ப்போம். இது 200 சதவீதம் உறுதி. நாங்கள் அதிமுக கூட்டணியில்தான் இருப்போம்.

    பொருத்து

    பொருத்து

    பிரச்சாரங்களை முடித்துகொண்டு முதல்வர் வந்தவுடன் கூட்டணி கட்சிகளை அழைத்து பேசுவார். அப்போது எங்களுக்கான இடங்களை நாங்கள் கேட்போம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதிமொழி, எங்களுக்கு இரு தொகுதிகளை ஒதுக்க கேட்கவுள்ளோம். இதை யார் முன்னெடுப்பார்களோ அதை பொருத்துதான் கூட்டணி.

    வேல்

    வேல்

    வாளும், வேலும் ஆயுதம் போன்றது. அதை திமுகவினர் வாங்குவது பெரிய விஷயம் அல்ல, மேலும் அண்ணாவின் திமுக கடவுள் மறுப்பு கொள்கையுடையது இல்லை. இத்தனை நாட்கள் மிகவும் அமைதியாக இருந்த விவசாயிகளின் போராட்டத்தை ஜனவரி 26ஆம் தேதி சீர்குலைக்க மத்திய அரசு செய்த சதி என்பதே ஒட்டுமொத்த இந்தியாவின் கருத்தாக உள்ளது.

    தவறானது

    தவறானது

    தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக பார்க்க மத்திய அரசு தயாராக இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. ஒட்டுமொத்த சமுதாயத்தினரின் கோரிக்கையை ஏற்காமல் ஒரு சில சமுகத்தின் கோரிக்கையை மட்டும் ஏற்குமேயானால் அது இந்த அரசுக்கு திட்டவட்டமான பலனை தராது. அமைச்சர் சீனிவாசன் இரு தினங்களுக்கு முன்னர் இந்த ஆட்சி தவறான ஆட்சி என்றால் அது வாய் தவறி வந்துவிட்டது. அதையெல்லாம் நாம் பொருட்படுத்தவே கூடாது. அதுமாதிரிதான் உதயநிதி சொன்னதும் என்றார் கருணாஸ்.

    English summary
    MLA Karunas says that i will meet Sasikala. We are in ADMK alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X