சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை அடுத்து செந்தில்வாசன் மீதும் குண்டாஸ் பாய்ந்தது

கந்த சஷ்டி கவசம் பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட செந்தில்வாசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கந்த சஷ்டி கவசம் பாடல் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்ட கறுப்பர் கூட்டம் செந்தில்வாசனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது செந்தில்வாசனும் குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளார்.

Recommended Video

    Karuppar Koottam சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது | Oneindia Tamil

    கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தன. கடவுள்கள் பற்றியும் மோசமான விமர்சனங்கள் அந்த சேனலில் வெளியிடப்பட்டிருந்தன.

    Karuppar kootam Senthilvasan arrested under Goondas Act

    அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பாஜக சார்பில் சென்னை போலீஸ் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். கறுப்பர் கூட்டம் யுடுயூப் சேனலில் வெளியிடப்பட்டிருந்த அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டன.

    காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் கடந்த 16 ஆம் தேதி புதுச்சேரி அரியங்குப்பம் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அதன் பின்னர் அவர் சென்னை போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சுரேந்திரன் மற்றும் செந்தில்வாசனை ஜூலை 30ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

    ரஃபேல் போர் விமானங்கள்- இந்திய விமானப்படையில் நாளை சேர்ப்புரஃபேல் போர் விமானங்கள்- இந்திய விமானப்படையில் நாளை சேர்ப்பு

    கந்த சஷ்டி கவசத்தையும் இந்து கடவுள்களையும் அவதூறாக பேசியவர்களையும் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் சுரேந்திரன் மீது நேற்று குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. சென்னை மாநகர காவல் ஆய்வாளர் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சுரேந்திரன் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் செந்தில்வாசன் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகிய இருவரும் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால் ஜாமீனில் வெளிவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    English summary
    Kantha sasti Kavasam issue Goondas act against karuppar kootam Senthilvasan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X