• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ஒரே ஒரு வழக்குதான்.. அதுக்கு குண்டாசில் அடைக்கலாமா?" கிருத்திகா கேள்வி.. முன்ஜாமீன் அளித்த ஹைகோர்ட்

|

சென்னை: "ஒரே ஒரு வழக்குக்காக ஒருத்தரை இப்படி குண்டர் சட்டத்தில் அடைப்பதா?" என்று கறுப்பர் கூட்டம் சேனல் ஓனர் சுரேந்திரன் மனைவி கிருத்திகா ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கேள்வி எழுப்பி இருந்தார்.. இதையடுத்து, கந்தசஷ்டி சர்ச்சை குறித்த, இந்த மனு சம்பந்தமாக பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், கருப்பர் கூட்டம் சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளர் கார்த்திக்குக்கு ஹைகோர்ட் முன்ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் சில தினங்களுக்கு முன்பு, வெளியிட்ட வீடியோக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

மூடநம்பிக்கைக்கு எதிராகவும், பகுத்தறிவை புகட்டுவதாகவும் சொல்லி கொண்டு, இந்து மத நம்பிக்கைகளை நக்கலடிக்கும் விதமாகவும், இந்து கடவுள்களையும், புராணங்களையும் அசிங்கப்படுத்தும் வகையிலும், கொச்சைப்படுத்தும் வகையிலும் கறுப்பர் அந்த வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.

நமீதா, கல்வெட்டு ரவி, அண்ணாமலை.. புதுசு கண்ணா புதுசு.. பாஜகவில் குவியும் புது முகங்கள்..!

புகார்

புகார்

இது இந்துக்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மக்களையுமே அதிருப்தியில் ஆழ்த்தியது.. அத்துமீறிய செயல் என்று சுரேந்திரனுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. போலீசிலும் புகார் தரப்பட்டது.. இதையடுத்து, கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த புகாரில் சுரேந்திரன், செந்தில்வாசன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.. ஜெயிலிலும் அடைத்தனர். இவர்களில் சுரேந்திரனை குண்டர் சட்டத்தின் கீழ்ஜெயிலில் அடைக்க கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார்.

 கிருத்திகா

கிருத்திகா

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சுரேந்திரனின் மனைவி கிருத்திகா, சென்னை ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "கலாச்சாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், கல்வியறிவின்மை, அறியாமையை ஒழிக்கவும் பல்வேறு தகவல்களை வெளியிட்ட தனது கணவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது.

 இன்று விசாரணை

இன்று விசாரணை

ஒரே ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்துள்ள நிலையில், குண்டர் சட்டத்தை பயன்படுத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது.. அவசரகதியில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது சட்டப்படியும், இயற்கை நீதிக்கு முரணானது" என்று கிருத்திகா தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.. வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.. அப்போது கிருத்திகா மனு குறித்து 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், சென்னை பெருநகர காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளது.

 நிகழ்ச்சி தொகுப்பாளர்

நிகழ்ச்சி தொகுப்பாளர்

இந்நிலையில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளரும், ஸ்டுடியோ வாடகைக்கு அளித்தவருமான கார்த்திக் என்பவரும் முன் ஜாமீன் கோரி சென்னை ஹைகோர்ட்டில் ஒன்றை முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், 200 நாட்களுக்கு பின் தற்போது உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வீடியோவில் பதிவான காட்சிகள் நீக்கப்பட்டு மன்னிப்பு கோரிய பிறகும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கார்த்தி அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

 நிபந்தனை ஜாமீன்

நிபந்தனை ஜாமீன்

அந்த வழக்கும் நீதிபதி ஏடி. ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது, வெளிநாடுகளிலிருந்து கறுப்பர் கூட்டம் சேனலுக்கு பணம் வருவதாகவும் அதுகுறித்து விசாரிக்க வேண்டியுள்ளதால் கார்த்திக்கு முன் ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பு ஆட்சேபனை தெரிவித்தது. எனினும், நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். சென்னை காவல்துறை மத்திய குற்றப்பிரிவின் விசாரணை அதிகாரி முன்பு கார்த்திக் தினமும் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

 
 
 
English summary
Karuppar Koottam Surendran case Chennai High Court
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X