அவர் வாழ்த்த.. இவர் தேங்க்ஸ் சொல்ல.. டூ விட்டு பழம் விட்ட தமிழிசை, ஜோதிமணி!
சென்னை: சண்டை போட்டுக்கிட்டே இருந்த தமிழகத்தின் இந்த ரெண்டு பெண் அரசியல்வாதிகள் மிகச்சிறந்த அரசியல் நாகரீகத்தை நாட்டுக்கு வெளிப்படுத்தி உள்ளனர்.
பொதுவாக, பாஜக-வுக்கும் காங்கிரசுக்கும் ஜென்ம பகைதான்... காலா காலத்துக்கும் ஏழரைதான். அதனால்தானோ என்னவோ, நாடு தழுவிய அளவிலிருந்து மாநில அளவில்வரை தலைவர்கள் ஒருத்தருக்கொருத்தர் காலை வாரி விட்டு, கிண்டல் கேலி என விமர்சனம் செய்து வருகிறார்கள்.
எப்போதெல்லாம் சாக்கு கிடைக்குமோ அப்போதெல்லாம் ஒரு சொட்டு வைத்து நக்கல் அடித்துவிட்டு போவார் கரூர் ஜோதிமணி. அதற்கு சரியான பதிலடியை திருப்பி தந்தே விடுவார் தமிழக பாஜக தலைவர் தமிழிசையும்!
அந்த ஒத்த டிவீட்டால் பெரும் சர்ச்சை.. பாஜகவில் சேரப் போகிறாரா திவ்யா.. பரபரக்கும் கர்நாடகா

ஜோதிமணி
பெரும்பாலும் இந்த சண்டை ட்விட்டரில்தான் நடக்கும். இதுக்கு டைம் எல்லாம் கிடையாது. தேர்தல் சமயத்தில் மட்டும் இருவரும் பிஸி.. தமிழிசை கனிமொழியையும், ஜோதிமணி தம்பிதுரையையும் வாரி வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

பிறந்த நாள்
இப்போது திரும்பவும் பழைய நிலைமையே வரும் என்று பார்த்தால், இங்கேதான் ஒரு ட்விஸ்ட் வந்துள்ளது. நேத்து தமிழிசைக்கு பிறந்த நாள்.. அந்த வகையில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு பார்லிமெண்ட்டில் புது வேட்பாளராக நுழைந்துள்ள ஜோதிமணி வாழ்த்து சொல்லி உள்ளார்.
|
வாழ்த்து
இது சம்பந்தமாக தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்புச் சகோதரி @DrTamilisaiBJP அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! எல்லா வளமும் பெற்று பல்லாண்டுவாழ வாழ்த்துகிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.
|
சகோதரி
இதற்கு தமிழிசையும், "வாழ்த்துக்கு நன்றி சகோதரி!" என்று பதிலுக்கு பதிவிட்டுள்ளார்!
அதாவது தமிழகத்தில் அரசியல் நாகரீகம் தழைத்தோங்கி வருகிறது மட்டுமல்ல.. மேன்மக்கள் மேன்மக்களே என்பதை இரு போராளிகளுமே நிரூபித்துவிட்டனர்!
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!