சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என் டிரஸ்.. என் இஷ்டம்.. நல்லா பொருமுங்க.. இன்னும் கூட எரிச்சலாகுங்க.. ஜோதிமணி பொளேர் டிவீட்

கரூர் எம்பி ஜோதிமணி பதிலடி தந்து ட்வீட் போட்டுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Jothimani replies for criticism against her dress| இன்னும் கூட எரிச்சலாகுங்க.. ஜோதிமணி பொளேர் டிவீட்

    சென்னை: "என் டிரஸ் குறித்து விமர்சிக்கும் காவிவாதிகளின் நெஞ்சு பொறுமலை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஜீன்ஸ், டீ ஷர்ட்டுகள் எனக்கு பிடித்த டிரஸ்.. நான் போய்ட்டு வந்து, நீங்கள் இன்னும் எரிச்சல் அடையும் வகையில் பதிவுகளை பதிவிடுவேன்" என்று ஜோதிமணி நறுக்கென ட்வீட்களை போட்டுள்ளார்.

    கரூர் மாவட்டத்தில் கூட்டணி தர்மத்தையும் தாண்டி அண்ணன் - தங்கையாக உலா வருபவர்கள் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, எம்பி ஜோதிமணி!

    இந்நிலையில், கரூர் எம்பி ஜோதிமணியை இந்தியா சார்பில் அழைத்து, கௌரவித்திருக்கிறது ஐநா.. விட்டல் வாய்ஸ்.. இது ஐநா சபையின் கீழ் இயங்கும் அமைப்பு ஆகும்.

    கமல் செய்யாத சாதனையா? ரஜினி பாஜகவின் நண்பர்.. அதனால்தான் விருது தராங்க.. சீமான் கிண்டல்!கமல் செய்யாத சாதனையா? ரஜினி பாஜகவின் நண்பர்.. அதனால்தான் விருது தராங்க.. சீமான் கிண்டல்!

    விட்டல் வாய்ஸ்

    விட்டல் வாய்ஸ்

    வருஷத்துக்கு 25 நாடுகளில் இருந்து இளம் பெண் தலைவர்களை அழைத்து மாநாடு நடத்துவதுதான் இந்த விட்டல் வாய்ஸ் அமைப்பின் வேலையே.. அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்களின் மனைவிகள்தான் பெரும்பாலும் இதில் அங்கம் வகித்து வருபவர்கள். அதன்படி, இந்த வருஷம் ஜோதிமணியை இந்தியா சார்பில் அழைத்து மிகப்பெரிய கௌரவத்தை செய்திருக்கிறது.

    மாநாடு

    இந்த கௌரவம் ஜோதிமணிக்கு 2-து முறையாக கிடைத்துள்ளது அதைவிட சிறப்பு ஆகும். 15 வருஷத்துக்கு முன்பு இதே விட்டல் வாய்ஸ் அமைப்பு ஜோதிமணியை அழைத்து கெளரவித்தது. மொத்தம் ஒரு வாரம் இந்த மாநாடு நடக்க உள்ளது. ஹரிசோனா மகாணத்தில் 2-ம் தேதியில் இருந்து 9-ம் தேதி வரை மாநாடு நடக்கிறது.

    சாதனைகள்

    சாதனைகள்

    இப்படி கௌரவிக்கப்படும் அரசியல் தலைவர்கள் தங்களை பற்றி அந்த மாநாட்டில் எடுத்துரைப்பார்கள். தாங்கள் யார், எந்த மாதிரியான குடும்ப சூழல், அரசியலுக்கு வந்த பின்னணி, சந்தித்த சவால்கள், நெருக்கடிகள், சாதனைகள் இப்படி இதுவரை கிடைத்த அனுபவங்களை அங்கு அனைவர் முன்பும் எடுத்து சொல்வார்கள்.

    செந்தில் பாலாஜி

    இதில் கலந்துகொள்ள அமெரிக்கா கிளம்பிய ஜோதிமணிக்கு சென்னை ஏர்போர்ட்டில் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தார் செந்தில் பாலாஜி. இது சம்பந்தமான போட்டோவையும் தனது பேஸ்புக் பதிவில் போட்டு வாழ்த்து சொன்னார். அதில், "சர்வதேச அளவில் " பெண் அரசியல்வாதிகள் " ( 25 நாடுகளில் இருந்து 25 பெண்கள்) பங்கேற்க்கும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்காவிற்கு செல்லும், நமது பாராளுமன்ற உறுப்பினர் S.ஜோதிமணி அவர்கள் வெற்றிமகளாக திரும்ப வேண்டும் என, தாய் தந்தை ஸ்தானத்தில் இருந்து, அன்போடு வாழ்த்திய போது" என்று பதிவிட்டிருந்தார்.

    பாராட்டு

    தாய் தந்தை ஸ்தானம் என்று செந்தில் பாலாஜி சொன்னது ஜோதிமணியை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பலரும் செந்தில் பாலாஜியின் பாசத்தைப் பாராட்டியிருந்தனர். இந்த நிலையில், காட்டன் புடவையில் தொகுதிக்குள் வலம் வந்த ஜோதிமணியை, மார்டர்ன் டிரஸ்ஸில் சென்னை ஏர்போர்ட்டில் பார்த்தது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம், ஜோதிமணி அணிந்திருந்த உடை மீதான விமர்சனமும் வழக்கம் போல சோஷியல் மீடியாவில் பரவலாக எழுந்தது. அதற்கு ஜோதிமணி நறுக்கென தன் ட்விட்டரில் பதில் சொல்லி உள்ளார்.

    நெஞ்சு பொருமல்

    நெஞ்சு பொருமல்

    "சர்வதேச அளவில் பெண் அரசியல்வாதிகள் பங்கேற்கும் மாநாட்டில் நான் கலந்துகொள்வதற்காக, என் தொகுதி, மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து வாழ்த்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன. என் உடை குறித்து விமர்சிக்கும் காவிவாதிகளின், பெண் வெறுப்பாளர்களின் நெஞ்சு பொருமலை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எந்த நிகழ்ச்சிக்கு எப்படி டிரஸ் அணிய வேண்டும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இது என் தனிப்பட்ட உரிமை. அதனால் அமைதியாகுங்கள்.

    கலாச்சாரம்

    கலாச்சாரம்

    எப்போதுமே ஏன் பெண்ணின் உடை ஒரு விவாதத்துக்கு உள்ளாகிறது? தனிப்பட்ட ஒருவரது விருப்பத்தின் மீது அடுத்தவர்களுக்கு அப்படி என்ன வேலை? இப்படி உடை குறித்து விமர்சிக்கும் எல்லா ஆண்களும், தமிழ் கலாச்சாரத்தின்படி வேட்டிதான் அணிகிறார்களா? முதலில் மற்றவர்களை மதிப்பதுதான் தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரம். முதலில் அதை கற்றுக்கொள்ளுங்கள்.

    கலாச்சாரம்

    கலாச்சாரம்

    காட்டன் சாரீஸ், ஜீன்ஸ், டீ ஷர்ட்டுகள் எனக்கு ரொம்பவும் பிடித்த உடை. நான் போய்ட்டு திரும்பி வந்த உடனேயே நீங்கள் இன்னும் எரிச்சல் அடையும் வகையில் பதிவிடுவேன். அதுவரைக்கும் கலாச்சாரம் என்றால் என்ன என்பதை தேடி கொண்டிருங்கள். பெண்களுக்கு மட்டும் முன்னேறி செல்வதில் ஏன் இவ்வளவு சுமைகள்? ஆண்களுக்கு இப்படி இல்லையே..

    விவாதம்

    விவாதம்

    பெண் தலைவர்கள் தங்களது தோற்றம், உடை, சிரிப்பு, திருமண வாழ்க்கை போன்றவற்றின் அடிப்படையில் எப்படி தாக்கப்படுகிறார்கள், ஆண்கள் ஏன் அப்படியெல்லாம் அணுகப்படுவதில்லை என்பது குறித்தும் விவாதிப்பதே இந்த கூட்டம். பெண்கள் மீது தொடர்ந்து வெளிப்படுத்தும் இந்த வெறுப்பை எதிர்த்துதான் நாங்கள் திடமாக போராடுகிறோம். எங்களுடன் இணைந்திருக்கும் எல்லா ஆண்களுக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

    English summary
    karur mp jothimani replies for criticism against her jeans tshirt dress and tweet about it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X