சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பதவிதான் பாலிசி.. தோற்றாலும் ஒரு எம்பி நிச்சயம்.. வேறென்னங்க வேணும்.. கஸ்தூரி செம கலாய்!

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக- பாமக கூட்டணியை கஸ்தூரி செம கலாய்!- வீடியோ

    சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி குறித்து நடிகை கஸ்தூரி கடுமையாக விமர்சனம் செய்து டுவீட் போட்டுள்ளார்.

    நடிகை கஸ்தூரி தற்போதெல்லாம் பொது விவகாரங்களிலும் தலையிட்டு டுவீட் போட்டு வருகிறார். ரஜினி தொடங்கி தமிழக அரசு, மத்திய அரசு, அரசியல்வாதிகள் வரை அனைவரையும் ஒரு கை பார்த்துவருகிறார்.

    இவரது டுவீட்டுகள் பெரும்பாலும் நகைச்சுவையாக சிந்திக்கக் கூடிய வகையிலும் இருக்கும். அந்த வகையில் இன்றும் ஒரு டுவீட் போட்டுள்ளார்.

    கிண்டல்

    அந்த டுவீட்டில் அவர் கூறுகையில் எப்போதுமே பாமகவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் அதிக சீட்டு கிடைக்கும். BJP கூட்டணியில் போன முறை மிக அதிகமாக 8 சீட்டுக்கள் - வென்றது 1 மட்டுமே. இந்த முறை வென்றாலும் வெல்லாவிட்டாலும் ஒரு MP பதவி நிச்சயம் . வேறு என்ன வேண்டும்? என்று பாமகவை கிண்டல் செய்துள்ளார்.

    தோற்று போயின

    தோற்று போயின

    கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்து போட்டியிட்டது. இதில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் இணைந்தன. எனினும் அவை தோற்று போயின.

    ஒரு தொகுதியில் போட்டி

    ஒரு தொகுதியில் போட்டி

    ஆனால் 8 இடங்களில் போட்டியிட்ட பாமக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அது தருமபுரி தொகுதியாகும். அங்கு போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றார்.

    ஒரு எம்பி தொகுதி

    ஒரு எம்பி தொகுதி

    அது போல் இந்த முறையும் பாஜக, அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. அக்கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஒரு மாநிலங்களவை எம்பி பதவியையும் கேட்டு பெற்றுள்ளது. இதன் மூலம் அக்கட்சிக்கு 7 தொகுதிகளிலும் தோற்றாலும் ஒரு எம்பி பதவி நிச்சயம் ஆகிறது.

    English summary
    Actress Kasthuri Sankar tweet that PMK gets one Rajyasabha MP seat, whether it wins or lose in Loksabha election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X