சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பட்டையை கிளப்ப ரெடியான திமுகவின் புதிய வாரிசு.. வேலூரிலிருந்து டெல்லி செல்லும் கதிர் ஆனந்த்!

திமுகவின் இன்னொரு எம்பியாகிறார் கதிர் ஆனந்த்

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore Election Result : திடீரென முன்னிலையில் வந்த கதிர் ஆனந்த்..அதிமுகவுக்கு பின்னடைவு- வீடியோ

    சென்னை: ஏற்கனவே பட்டைய கிளப்பி கொண்டும், பாஜக எம்பிக்களை அலற விட்டுக் கொண்டும் இருக்கும் திமுக எம்பிக்களின் பட்டியலில் புதுவரவாக நுழைய உள்ளார் கதிர்ஆனந்த்!

    கருணாநிதி இருந்தபோது, திமுக எம்பிக்கள் என்றாலே ஓரிருவரே கண்முன் வந்து நிற்பார்கள். அதிலும், டெல்லியில் எந்தவித விவகாரங்களை பேசுவதானாலும் கருணாநிதியின் முக்கிய சாய்ஸ் டி.ஆர்.பாலுவாகத்தான் இருந்தார்.

    ஆனால் இப்போது இந்த நிலை தலைகீழாக மாறி உள்ளது. 37 திமுக கூட்டணி எம்பிக்களும் ஒரு முடிவோடுதான் டெல்லிக்கு கிளம்பி போனார்கள். திமுக தேர்தலில் அபார வெற்றி பெற்றதை மோடி அரசு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லைதான்.

    இந்த பரபரப்புல கூட கிளுகிளுப்பு கேட்குது.. திமுக வெற்றி பற்றி துரைமுருகன் சொன்ன நக்கல் கருத்து! இந்த பரபரப்புல கூட கிளுகிளுப்பு கேட்குது.. திமுக வெற்றி பற்றி துரைமுருகன் சொன்ன நக்கல் கருத்து!

    செயல்பாடு

    செயல்பாடு

    அதனால்தான் பதவியேற்பு விழாவுக்கு கூட கலந்து கொள்ளாதபடி ஒரு அழைப்பை ஸ்டாலினுக்கு விடுத்திருந்தது. இதை திமுக தரப்பு கண்டு கொள்ளவில்லை என்றாலும், தங்கள் செயல்பாட்டை நாடாளுமன்றத்தில் காட்டி வருகிறது. பதவியேற்ற முதல் நாளில் இருந்தே இப்படி பாஜக எம்பிக்கள் பிரஷரை திமுக எம்பிக்கள் எகிற வைத்து வருகின்றனர்.

    வாரிசு எம்பி

    வாரிசு எம்பி

    அந்த வகையில் இப்போது இன்னொரு எம்பியாக கதிர் ஆனந்த் இணைய போகிறார். வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், கனிமொழி, என்ற வாரிசு வரிசையில் இணைய போகிறார். கதிர்ஆனந்த் அரசியலுக்கு புதியவர் என்று நமக்கு தெரியும். ஆனால் அவர் ஒன்றும் புதியவர் இல்லை, கலைஞரின் கையால் வளர்க்கப்பட்டவர் என்று துரைமுருகன் சொல்கிறார்.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    எப்படி இருந்தாலும் கதிர் ஆனந்துக்கு துரைமுருகன் துணை என்றும் இருக்கும் என்றாலும், திமுக எம்பிக்களின் வரிசையில் கதிர் ஆனந்த்தும் தற்போது இணைய உள்ளதால், அவர் எப்படி பேசபோகிறார், அவரது அரசியல் பார்வை எப்படி இருக்கும், மற்ற திமுக கூட்டணி எம்பிக்களுக்கும், வாரிசு எம்பிக்களுக்கும் இணையாக செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

    கசப்பான அனுபவம்

    கசப்பான அனுபவம்

    ஆனால் ஒரு விஷயம் இதில் உள்ளது. அது என்னவென்றால், திமுக மற்றும் கூட்டணியின் மற்ற 37 எம்பிக்களும் ரொம்ப கேஷுவலாக தேர்தலை ஜெயித்து போயுள்ளனர். ஆனால் கதிர் ஆனந்த் மட்டும்தான் தப்பிப் பிழைத்துப் போயுள்ளார். இது ஒன்று மட்டுமே வேலூர் வெற்றஇயில் திமுகவுக்கு கிடைத்த ஒரு கசப்பான சமாச்சாரம்!

    ஆட்டம்

    ஆட்டம்

    ஆனாலும் என்ன ஒரு ஓட்டில் ஜெயித்தாலும் அது வெற்றிதான். அந்த வகையில் திமுகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்த்து தமிழக மக்கள் 38 தொகுதிகளை அள்ளிக் கொடுத்துள்ளனர். இதற்குப் பதிலுக்கு திமுக எந்த வகையில் மக்களை குளிர்விக்கப் போகிறது என்பதில்தான் அதன் எதிர்காலமே அடங்கியுள்ளது. இனிமேல்தான் ஆட்டமும் ஆரம்பிக்கும்.. பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    vellore lok sabha election. vote result live update: Durai Murugans son Kathir Anand becomes DMK MP
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X