சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டாட்டா காட்டிய ஃபனி.. ஹாய் சொன்ன அக்னி நட்சத்திரம்.. இன்னும் 4 நாட்களில் சுட்டெரிக்க போகும் வெயில்!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்னும் நான்கு நாட்களில் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்னும் நான்கு நாட்களில் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தை கோடை மழை ஏமாற்றிவிட்டது. ஃபனி புயலால் பெரிய அளவிற்கு தமிழகத்தில் பாதிப்பு ஏற்படும், மழை வரும் என்று வானிலை மையம் கணித்து இருந்தது.

ஆனால் தமிழகத்திற்கு ஃபனி பைபை சொல்லிவிட்டு, ஒடிசாவை நோக்கி ஓடி சென்றுவிட்டது. இதனால் தமிழகம் முழுக்க இன்னும் சில நாட்களில் வெயில் மிகவும் அதிகமாக உள்ளது.

சென்னையில் வெயிலை காணோம்.. 'தண்ணீர் தண்ணீர்' சரிதா போல மழைக்காக காத்திருக்கும் மக்கள்! சென்னையில் வெயிலை காணோம்.. 'தண்ணீர் தண்ணீர்' சரிதா போல மழைக்காக காத்திருக்கும் மக்கள்!

வெயில் அதிகரிக்க போகிறது

வெயில் அதிகரிக்க போகிறது

ஃபனி புயல் ஏமாற்றியதால், தமிழகத்தில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரிக்க போவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்ற வாரத்திலேயே கத்திரி வெயில் போல, தமிழகம் முழுக்க கடுமையான வெப்பம் சுட்டெரித்தது. நெல்லை, சேலம், கோவை, வேலூர், சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெயிலின் தாக்கத்தால் அனல் காற்று வீசியது.

லேசாக மழை

லேசாக மழை

ஆனால் இடையில் லேசான கோடை மழை பெய்தது. ஃபனி புயல் காரணமாக சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. சென்னையிலும் கூட இரவு நேரங்களில் லேசான தூறல் மழை பெய்து வந்தது. ஆனால் அந்த மழையும் தமிழகத்தை ஏமாற்றி உள்ளது.

தொடங்கும்

தொடங்கும்

இந்த நிலையில்தான் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்னும் நான்கு நாட்களில் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அக்னி நட்சத்திரம் என்பது சூரியனின் கதிர்கள் நேராக நம் மீது 90 டிகிரியில் விழுவதாகும். இதனால் மக்களுக்கு பாதிப்பு அதிக அளவில் ஏற்படும்.

கவனம்

கவனம்

சென்ற வருடத்தை விட இந்த வருடம் வெயில் அதிகமாக இருக்கும் என்று ஏற்கனவே வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் 110 டிகிரி வரை வெயில் அடிக்கும் என்று வானிலை மையம் கூறி உள்ளது. இதனால் இந்த வருடம் வறட்சியும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

English summary
Kathri Veyil will start in next 4 days in Tamilnadu says Chennai meteorological center.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X