• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"சேதார" ஜாதவ்.. இதை விட கேவலமா திட்ட முடியுமான்னு தெரியலை.. ஆனாலும் சிஎஸ்கே விடாது!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸுக்கு என்னாச்சு என்று நீங்க அதிர்ச்சி அடைஞ்சா.. இன்னிக்குதான் நீங்க ஐபிஎல் போட்டியே பார்க்கறீங்கன்னு அர்த்தம்.. என்னாது சென்னை ஜெயிச்சிருச்சான்னு ஆச்சரியம் அடைந்தால்தான் நீங்க முதல் போட்டியிலிருந்து பார்க்கறீங்கன்னு பொருள்.. இத்தனை அக்கப்போர்களுக்கும் அடித்தளம் போட்டதே இந்த சேதார ஜாதவ்தான்.. அதாவது கேதார் ஜாதவ்.

கிட்டத்தட்ட இழவு வீடு போல ஆகி விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டங்கள். அத்தனை கேவலமாக இருக்கிறது. இதெல்லாம் ஒரு கிரிக்கெட்டா என்று காரித் துப்பாத குறையாக பலரும் வெறுப்படைந்து போயுள்ளனர்.

தீவிர சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கூட அடச்சே என்று துண்டை உதறி குப்பையில் போட்டு விட்டு நடையைக் கட்ட ஆரம்பித்து விட்டனர் மற்ற அணிகளை நோக்கி. அந்த அளவுக்கு படு மோசமாக ஆடிக் கொண்டிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

 "அன்பு" மறைந்திருக்கலாம்.. உன் அன்பு.. எப்போதும் உள்ளிருக்கும்.. மகனுடன் மா.சுப்பிரமணியம்!

திரும்பத் திரும்ப படுத்தற நீ

திரும்பத் திரும்ப படுத்தற நீ

திரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ.. என்று வெள்ளை சுப்பையாவை ஒரு படத்தில் வடிவேலு புலம்ப விட்டு பைத்தியமாக்கியிருப்பார். அந்த மாதிரி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை பைத்தியமாக்கி வேடிக்கை பார்த்து "விளையாடி"க் கொண்டுள்ளார் இந்த கேதார் ஜாதவ். எந்தப் போட்டியில் எந்த இடத்தில் இறக்கினாலும் விளையாடித் தொலைக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார் இந்த ஜாதவ். இவருக்கு என்னதான் பிரச்சினை என்று இவருக்கும் தெரியலை.. எவருக்கும் புரியலை.

காட்டுத்தனமாக திட்டினாலும்

காட்டுத்தனமாக திட்டினாலும்

ரசிகர்கள் கொடூர கொந்தளிப்பின் உச்சத்திற்குப் போனாலும் கூட, கண்டக்க முண்டக்க காட்டுத்தனமாக திட்டினாலும் சரி, விடாமல் இவரை தொடர்ந்து ஆட்டத்தில் சேர்த்து கடுப்படித்துக் கொண்டுள்ளார் தோனி. சரி இத்தனை முறை நம்மை நம்பி களம் இறக்குகிறார்களே.. ஒரு வாட்டியாவது விளையாடித் தொலைப்போம் என்று இல்லாமல் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் அப்படியே சாணி மாதிரி நங்குன்னு ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கிறார் ஜாதவ்.

உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா

உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா

உனக்கெல்லாம் மனசுல ஈரமே இல்லையா.. என்று அழாத குறையாக புலம்பும் கவுண்டமணி போல ரசிகர்கள் கதறித் துடித்து கத்திக் கோபப்பட்டுப் பார்க்கிறார்கள்.. ம்ஹூம்.. அப்படியே இளித்த வாயுடன்.. அதாவது சிரித்த வாயுடன் சீரியஸாகவே சும்மா வந்து போய்க் கொண்டிருக்கிறார் ஜாதவ். தோனி விடாமல் இவரை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு அலைவதற்கு, அப்படி என்ன இவர் ஒஸ்தியாக இருக்கிறார் என்று அத்தனை பேரும் தீவிரமாக ஆராய்ந்து பார்த்தும் கூட எதுவும் புலப்படவில்லை.. தொடர்ந்து போட்டிகளில் பல்பு வாங்குவது மட்டுமே தொடர் கதையாகி வருகிறது.

வாய் வலிக்குதுடா டேய்!

வாய் வலிக்குதுடா டேய்!

சிட்டிசன்கள் முதல் நெட்டிசன்கள் வரை அத்தனை பேரின் வாய்களும் உலர்ந்து போய் விட்டன.. கேதார் ஜாதவின் ஆட்டத்தைப் பார்த்து காரித் துப்பி.. ஆனாலும் விடாமல் அணியில் இடம் பெற்றுக் கொண்டுதான் வருகிறார் ஜாதவ்.. தோனியும் அவரை விடாமல் இடுப்பில் தூக்கியபடிதான் உலவிக் கொண்டுள்ளார். இதுதான் ரசிகர்களை ரொம்பவே கடுப்பாக்கி வருகிறது. நினைக்க நினைக்க நெஞ்சு வலியே வந்து விடும் போல இந்த ஜாதவை நினைத்தால்..!

எதையாச்சும் பண்ணித் தொலைங்க

எதையாச்சும் பண்ணித் தொலைங்க

என்னவோ பண்ணித் தொலைங்க.. இதற்கு மேலும் சென்னை சூப்பர் கிங்ஸை நம்பிப் புண்ணியம் இல்லை என்று பலரும் டெல்லி, பெங்களூர் என பொடி நடையாக கிளம்பத் தொடங்கி விட்டனர்.. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் போல மனதில் வேதனையை அடக்கிக் கொண்டு, துக்கத்தை துடைத்துக் கொண்டு, துயரத்தை விழுங்கிக் கொண்டு.. "எ பிலிம் பை கேதார் ஜாதவ்" என்று கடைசியில் "என்ட் கார்டு" போட்டு சி.எஸ்.கேவுக்கு விரைவில் குட்பை சொல்ல எல்லோரும் தயாராகி வருகிறார்கள்.. நீங்களும் ஒரு கை கொடுங்க.. "அடக்கம்" பண்ண!

அப்புறம் பங்காளிகளா.. "என்னய்யா பண்ணிட்டான் எங்காளு.. பந்தை பூராம் தின்னுட்டான்.. இது ஒரு தப்பா.. ஜாதவ் பாபா கி ஜே" ... என்று யாரும் ஆர்மி ஆரம்பிச்சுடாதீங்க.. அப்புறம் வாயை கன்ட்ரோல் பண்ண முடியாது!

English summary
The Irrelevance of Kedar Jadhav is increasing day by day. The out of form batsman is becomng laughing stock for all.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X