சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"தங்க மகன்".. செய்த வேலையை பார்த்தீங்களா.. ஏற்கனவே ஜெயில்.. இப்போ வசமாக சிக்கிய ஹரிநாடார்..!

ஹரிநாடார் மீது மேலும் ஒரு மோசடி புகார் கூறப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: ஏற்கனவே பணமோசடி வழக்கில் சிக்கி ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டிருக்கும் ஹரிநாடார் மீது இன்னொரு பகீர் புகார் கிளம்பி உள்ளது.

அடிக்கடி ஏதாவது ஒரு புகாரில் அல்லது சர்ச்சையில் சிக்கி கொண்டு வருபவர் ஹரிநாடார்.. பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர்.. சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார்...

8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு

உடம்பெல்லாம் தழைய தழைய நகைகளை அள்ளி மாட்டுக் கொள்வார்.. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு சுயேட்சைகளில் அதிகவாக்குகள் பெற்ற வேட்பாளர் என்ற சாதனை படைத்துள்ளார்..

 ஜெயில்

ஜெயில்

அதைவிட முக்கியமாக, இவர் பிரச்சாரத்துக்கு சென்றால், இவர் நகைகளை பார்ப்பதற்காகவே பெண்கள் கூட்டம் திரண்டுவரும். சில தினங்களுக்கு ரூ. 16 கோடி மோசடி வழக்கிலும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கேளரா மாநிலம் கோவளத்தில் ஹரிநாடார் கைது செய்யப்பட்டார்.. போலீஸார் அவரை விசாரணைக்காக பெங்களூர் கொண்டு சென்றுள்ளனர்.இப்போது ஜெயிலில்தான் இருக்கிறார்.

புகார்

புகார்

இந்நிலையில், அவர் மீது மேலும் ஒரு பணமோசடி புகார் எழுந்துள்ளது... கேரளாவில் உள்ள தொழிலதிபர்களுக்கு 100 கோடி ரூபாய் கடன் வாங்கித்தருவதாக 1.5 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டாராம் ஹரி நாடார்.. இஸ்மாயில், பஷீர் ஆகிய 2 பேர் ஆன்லைன் மூலமாக போலீசில் புகார் தந்துள்ளனர்.

 பொருட்கள்

பொருட்கள்

அவர்களிடம், ரூ.100 கோடி கடன் வாங்கி தருவதாக ஹரிநாடார் சொன்னாராம்.. அதற்கு ரூ.1.5 கோடி கமிஷனை வாங்கி கொண்டு, இதுவரை கடன் பெற்று தரவே இல்லையாம்... சம்பந்தப்பட்ட இஸ்மாயிலும், பஷீரும், அரபு நாடுகளுக்கு இந்திய வாசனைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பலசரக்குப் பொருட்களையும் ஏற்றுமதி பிசினஸ் செய்கிறார்கள்..

ஆவணங்கள்

ஆவணங்கள்

இவர்களிடம் தன்னை "கேப்பிட்டல் யூபி இன்வெஸ்ட்மென்ட்" என்ற நிறுவனத்தின் ஆசியா நாடுகளுக்கான நிர்வாகி என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். ஒருசில ஆவணங்களை அவர்களிடம் ஹரிநாடார் காட்டவும், உண்மை என நம்பி ஏமாந்து போய் உள்ளனர்.. கடன் வாங்கி தரேன்னு சொன்னீங்களே, என்னாச்சு என்று ஹரிநாடாரிடம் 2 பேரும் கேட்டுள்ளனர்.. அதற்கு அவர், "ஐ யெம் வெரி பிஸி" என்று பிரச்சாரத்தை காரணம் காட்டிவிட்டாராம். தேர்தல் முடிந்தும் பணம் தரவில்லையாம்..

புகார்

புகார்

இதற்கு பிறகுதான், தங்களுக்கு கடனே வேணாம், கமிஷனாக தந்த ஒன்றரை கோடி ரூபாய் தந்தால் போதும் என்று ஹரிநாடாரிடம் சொல்லவும், அதற்கும் பதிலில்லை.. செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டதாம்.. அதனால்தான் போலீஸ் வரை இப்போது புகார் வந்துள்ளது. ஏற்கனவே ஹரிநாடார் ஜெயிலில் உள்ளதால், இந்த வழக்கும் புதிதாக இணைந்துள்ளதால், கம்பி எண்ணும் நாள் இன்னும் அதிகமாகும் என்றே தெரிகிறது.

English summary
Kerala business man complaint against Hari nadar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X