கேரள முதல்வர் பினராயி விஜயன் விரைவில் பூரண நலம்பெற வேண்டும் - கமல், மு.க ஸ்டாலின் ட்வீட்
சென்னை: கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் விரைவில் பூரண நலம்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னெச்சரிக்கைகளையும் மீறித் தாக்குகிறது கொரோனா. விரைவில் நலம்பெற்று மக்கள் பணிக்குத் திரும்ப வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தொற்று உறுதி - தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையிலும் பாதிப்பு
கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மகளுக்கு கடந்த 6ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது பினராயி விஜயனுக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் விரைவில் பூரண நலம்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
I am sorry to hear that Kerala Chief Minister @vijayanpinarayi has tested positive for #COVID19.
— M.K.Stalin (@mkstalin) April 8, 2021
Wishing him a speedy recovery back to good health.
Urge all those in public life to take necessary precautions.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது அறிந்து வருத்தமுற்றேன் என பதிவிட்டுள்ளார். அவர் விரைந்து பூரண நலம் பெற விழைகிறேன். பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளோர் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், பினராயி விஜயன் விரைவில் குணம் பெற்று பணிக்கு திரும்ப வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
கேரள முதல்வர் நண்பர் பினராயி விஜயன், சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தோழி ராதிகா சரத்குமார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். 4 நாட்கள் முன்புவரை தேர்தல் களத்தில் பரபரப்பாக இருந்தவர்கள். (1/2)
— Kamal Haasan (@ikamalhaasan) April 8, 2021
கேரள முதல்வர் நண்பர் பினராயி விஜயன், சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தோழி ராதிகா சரத்குமார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். 4 நாட்கள் முன்புவரை தேர்தல் களத்தில் பரபரப்பாக இருந்தவர்கள்.
முன்னெச்சரிக்கைகளையும் மீறித் தாக்குகிறது கொரோனா. இவர்கள் விரைவில் நலம்பெற்று மக்கள் பணிக்குத் திரும்ப வாழ்த்துகிறேன். நோய்த்தாக்குதலுக்கு ஆட்படாதவர்கள் அலட்சியம் தவிர்க்க வேண்டும். ஆபத்தை உணரவேண்டும். நான் உள்பட. (2/2)
— Kamal Haasan (@ikamalhaasan) April 8, 2021
முன்னெச்சரிக்கைகளையும் மீறித் தாக்குகிறது கொரோனா. இவர்கள் விரைவில் நலம்பெற்று மக்கள் பணிக்குத் திரும்ப வாழ்த்துகிறேன். நோய்த்தாக்குதலுக்கு ஆட்படாதவர்கள் அலட்சியம் தவிர்க்க வேண்டும். ஆபத்தை உணரவேண்டும். நான் உள்பட என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.