சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பத்மநாபனை கைது செய்யுங்கள்.. பாத்திமாவிற்காக ஸ்டாலின் குரல் தர வேண்டும்..கேரளாவில் பெரும் போராட்டம்

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை காரணமாக கேரளாவில் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதற்காக தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கேரளா மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை ஐஐடியில் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

    சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை காரணமாக கேரளாவில் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதற்காக தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கேரளா மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா சென்னையில் தற்கொலை செய்துகொண்டார். சென்னை ஐஐடியில் படித்து வந்த அவர், மனஅழுத்தம் மற்றும் பேராசிரியர்களின் மத ரீதியான பாகுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

    பாத்திமா தற்கொலை வழக்கு சிசிபிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான தனிப்படை இந்த வழக்கை இனி விசாரிக்கும் என்று ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி அளித்துள்ளார்.

    3 ஆண்டுகளில் 9 பேர் தற்கொலை.. மாணவர்கள் முதல்.. உதவி பேராசிரியர் வரை.. அதிர வைக்கும் சென்னை ஐஐடி3 ஆண்டுகளில் 9 பேர் தற்கொலை.. மாணவர்கள் முதல்.. உதவி பேராசிரியர் வரை.. அதிர வைக்கும் சென்னை ஐஐடி

    கேரளா மரணம்

    கேரளா மரணம்

    கேரளாவை இந்த மரணம் தற்போது உலுக்கி இருக்கிறது. கேரள மாணவர்கள் பலர் தமிழகத்தில் படிக்கிறார்கள். சென்னை, சேலம், கோவை, தருமபுரி, கன்னியாகுமரி என்று பல மாவட்டங்களில் கேரள மாணவர்கள்தான் அதிகம் படிக்கிறார்கள். இந்த தற்கொலை அந்த மாணவர்களை எல்லாம் மொத்தமாக உலுக்கி இருக்கிறது.

    போராட்டம்

    போராட்டம்

    கேரளாவில் எல்லா கல்லூரியிலும் மாணவர்கள் அமைப்பு இருப்பது இயல்பான விஷயம். அதிகமாக இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்து அமைப்புகள் கேரளாவில் இருக்கிறது. இவர்கள்தான் தற்போது பாத்திமா தற்கொலைக்கு நீதி கேட்டு போராட்டம் செய்து வருகிறார்கள்.

    நீதி வேண்டும்

    நீதி வேண்டும்

    நேற்று மதியத்தில் இருந்து கேரளாவில் பல பகுதிகளில், கல்லூரி வளாகங்களில் பாத்திமாவிற்கு நீதி வேண்டும் என்று கேட்டு மாணவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். அவர்கள் இந்த போராட்டத்தில் நிறைய கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தமிழகத்திலும் வேண்டும்

    தமிழகத்திலும் வேண்டும்

    அதன்படி தமிழக மாணவர்கள் இதற்காக போராட வேண்டும். கேரளாவில் வெள்ளம் வந்த போது தமிழர்கள் உதவினார்கள். அப்படித்தான் இதுவும். இதற்காக தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

    மதம் காரணம்

    மதம் காரணம்

    அதேபோல் இந்த தற்கொலைக்கு மதரீதியான காரணங்கள் இருக்கிறது. அதை விசாரணையில் கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். பாத்திமா தன்னுடைய தற்கொலைக்கு காரணம் பேராசிரியர் சுதர்சனம் பத்மநாபன் என்று கூறியுள்ளார். ஆனால் அவரை இன்னும் போலீசார் கைது செய்யவில்லை.

    சுதர்சனம் பத்மநாபன் கைது

    சுதர்சனம் பத்மநாபன் கைது

    பேராசிரியர் சுதர்சனம் பத்மநாபனை போலீசார் உடனே கைது செய்ய வேண்டும் என்று கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சி அழுத்தம் தர வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் இதில் உடனடியாக குரல் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பெரிய அளவில் வெடிக்கும்

    பெரிய அளவில் வெடிக்கும்

    இதனால் தற்போது தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் தொடங்கி உள்ளது. தென்னிந்திய அளவில் இந்த பிரச்சனை பெரிதாகும் என்கிறார்கள். ஸ்டாலின் இது தொடர்பாக இன்று காலை பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kerala erupts for protesting against IIT Student Fathima Death in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X